விஜய் என்றாலே அது மாஸ் தான் என்பதற்கிணங்க வசூலாலும் விமர்சன ரீதியாலும் மக்கள் மனங்களில் கொடி கட்டி பறந்து வருகிறார் விஜய். ஆரம்பம் முதலே வெற்றி தோல்விகளை ஏராளமாக பார்த்து வளர்ந்தவர். இன்று தமிழ் சினிமாவில் இரு பெரும் சகாப்தங்களாக இருக்கும் ரஜினி கமலுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார் நடிகர் விஜய்.
தமிழ் சினிமாவின் வாரிசு
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் வருகிற பொங்கல் அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அவர் எப்பொழுது ஒரு பெரிய நடிகர் என்ற அந்தஸ்திற்கு வந்தாரோ அதிலிருந்தே அவரின் ரிலீஸ் ஆகின்ற படங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கின்றது.
அதே போல் தான் இந்த வாரிசு படத்திற்கும். நாளைய தீர்ப்பில் ஆரம்பித்து இன்று ஒரு சினிமா வாரிசாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு அவர் முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும் அவரது தந்தையும் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : அப்பவே பேன் இந்திய படம் எடுத்த கமல்… இதுக்கும் பிள்ளையார் சுழி போட்டது இவர்தானா??
விஜய்க்கு மைல் கல்
மேலும் செல்வா, மாணவன், போன்ற மசாலா படங்களையே கொடுத்து வந்த விஜயிற்கு ஒரு கமெர்ஷியலான குடும்ப கதையை கொடுத்து மக்களை அண்ணாந்து பார்க்க வைத்தவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கிய பூவே உனக்காக படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
விஜய் அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் விஜயின் கெரியரிலேயே அந்த படம் தான் முதன் முதலில் ப்ளாக் பஸ்டர் படமாக விளங்கியது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 250 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கீதா நடித்திருந்தார். தமிழ் சினிமாவிலேயே இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது விஜய்க்கு.
நான் இப்ப ஆக்ஷன் ஹீரோ
இப்படி விஜயின் கெரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குனர் விக்ரமன் 2002 ஆம் ஆண்டு உன்னை நினைத்து என்ற படத்தை எடுத்தார். அந்த படத்தில் நடிகர் சூர்யா , நடிகை சினேகா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதலில் சூர்யாவிற்கு பதிலாக நடிகர் விஜய் தான் அந்த படத்தில் நடித்தாராம்.
ஒரு நாள் மட்டும் நடித்து விட்டு விக்ரமனிடம் என்னால இந்த படத்தில் நடிக்க முடியாது எனவும் நான் ஆக்ஷன் சம்பந்தமான படங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூற விக்ரமனும் ஏதும் சொல்லாமல் சரி என்று சொல்லிவிட்டாராம். அந்த நேரத்தில் விஜய்க்கு தமிழன், யூத், பகவதி போன்ற ஆக்ஷன் படங்கள் வரிசை கொட்டி நின்றன.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் ஹீரோவானதே எங்களால தான்!…வளர்ந்துட்டா மறந்துருவாங்க!..புலம்பும் பிரபலம்!..
கை கொடுத்த சூர்யா
விஜய் இப்படி சொன்னதும் அடுத்து ஹீரோவுக்கு என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் போது பிரசாந்தை அணுகலாமா என்று யோசித்திருக்கின்றனர். அந்த நேரத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா பிரெண்ட்ஸ் படம் முடித்த சமயம் என்பதால் விக்ரமனிடம் சூர்யாவை சிபாரிசு செய்திருக்கிறார்.
அதன் மூலம் வந்தவர் நடிகர் சூர்யா. சூர்யாவின் கெரியரிலயும் ஒரு மைல் கல்லாக அமைந்து கிட்டத்தட்ட 117 நாள்கள் அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த சுவாரஸ்ய தகவலை நடிகர் ரமேஷ் கண்ணாவே தெரிவித்தார்.