கேபியுடன் காதலா?..என்ன இப்படி சொல்லிட்டீங்க?..பகிரங்கமாக கூறிய ஆஜித்!...

by Rohini |
gabi_main_cine
X

ஏற்கெனவே பிரபலமாக இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானவர்கள் கேப்ரியல்லா மற்றும் ஆஜித். ஆஜித் அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியரில் டைட்டில் கார்டு வாங்கியவர்.

gabi1_cine

கேப்ரியல்லாவும் டான்ஸ் ஜோடியில் கலந்துகொண்டவர். ஆகவே மக்கள் மத்தியில் ஏற்கெனவே பரீட்சையமானவர்கள் தான் இருவரும். பிக்பாஸ் வீட்டிற்குள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தும் அது குறையாமல் தான் இருந்தது.

இதையும் படிங்கள் : என்னால கூட அப்படி நடிக்கமுடியாது!.. நாகேஷின் அந்த நடிப்பை பற்றி பிரமித்துப் போன சிவாஜி!..

gabi2_cine

இருவரும் சேர்ந்து ஜோடியாக ரீல்ஸ் வீடியோ போடுவது, பிக்பாஸ் டான்ஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டது என எப்பொழுதும் ஒன்றாகவே பார்க்க முடிந்தது. இவர்களை பார்க்கும் ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றே கருதி வந்தனர்.

gabi3_cine

இதையும் படிங்கள் : என்னங்கடா கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்துறீங்க?..கோபத்தில் முரளி செஞ்ச வேலையால் ஆடிப்போன படக்குழு!..

இதை பற்றி கேட்ட ஆஜித்திடம் நாங்கள் காதலிக்கிறோம் என்றே நிறைய பேர் கூறிவருகின்றனர். எங்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு சகோதர சகோதரியை போல தான் நாங்கள் பழகுகிறோம். அவரும் அப்படித்தான். நானும் அப்படித்தான். எல்லா விதத்திலும் ஒரு சகோதரி எப்படி துணை நிற்பாரோ அதே மாதிரி கேபி எனக்கு இருக்கிறார் என்று உணர்ச்சி பொங்க கூறினார் ஆஜித்.

Next Story