வருத்தப்படும் கோபி… மீண்டும் பிரச்னையில் முத்து… கோபத்தில் இருக்கும் கோமதி…
VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் வீட்டிற்கு வரும் கோபி மற்றும் ராதிகா இடையே பிரச்சனை எழுகிறது. ராதிகா கொடுக்கும் சாப்பாட்டை கோபி தட்டிவிட அவர் சண்டையிட்டு விட்டு ரூமுக்குள் சென்று அடைந்து விடுகிறார். பின்னர் கோபி பாக்கியாவிடம் இருந்ததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
காலையில் வாக்கிங் வரும் செழியன் எழிலுக்கு கால் செய்து பேசுகிறார். கோபி வர அவரிடம் எழில் விஷயத்தை பேசிவிட்டு தனக்கு குழந்தை பிறக்கப் போகும் விஷயத்தையும் கூறுகிறார். வீட்டினர் ராமமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு எப்படி கொண்டாடலாம் என பேசிக்கொண்டு இருக்கின்றனர். மயூராவிடம் இனி அப்பாவிடம் சண்டையிட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை தொடரில் வீட்டில் இருக்கும் மீனாவிடம் ஸ்ருதி அறிவுரை சொல்லி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். கோயிலில் மீனாவின் அம்மா கவலையாக இருக்க மீனா வந்தவுடன் சந்தோஷம் அடைகின்றனர். வீட்டிற்கு வரும் முத்து மீனாவை கூப்பிட்டுக் கொண்டே வர அவ வரமாட்டார் என்கிறார் விஜயா.
கோயிலுக்கு போயிருக்கா எனக் கூற முத்து நம்ப மறுக்கிறார். என்கிட்ட கத்தாம கோயிலில் போய் உன் பொண்டாட்டிய பாரு என கூறுகிறார். அங்கு செல்லும் முத்து மீனாவை பார்த்து நான் இவ்வளவு சொல்லியும் இங்க வந்திருக்க தானே என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு வரும் மீனாவிற்கு விஜயா விஷயத்தை உடைக்கிறார்.
முத்துவிற்காக அவர் காத்திருக்க குடித்துவிட்டு மீனாவை திட்டி விட்டு தூங்கி விடுகிறார். விஜயா மீனாவிடம் பெருசா நடக்கும் என்று நினைத்தேன். மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு என கலாய்க்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பாண்டியன் தங்க மயிலுக்கு கால் செய்து பேச கோமதியிடம் கூறுகிறார். எனக்கு நீங்க என்னைக்காவது கால் பண்ணி இருக்கீங்களா? உங்க மருமகளுக்கு மட்டும் பண்ண சொல்றீங்களே என்னை திட்டி விடுகிறார். வெளியில் வரும் பாண்டியன் தன்னுடைய மொபைலில் இருந்து கோமதிக்கு வீடியோ கால் செய்த அவரை பயன்படுத்துகிறார்.
இதையும் படிங்க: வாயா பேசுற நீ? திரிஷாவுக்கு கவுண்டர் கொடுத்த உதவி இயக்குனரை நடிக்க வைத்த மணிரத்னம்!..
பின்னர் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மீனா மற்றும் ராஜி இருவரும் வந்து பார்த்துவிட்டு அவரை கலாய்க்கின்றனர். ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கும் போது டயூஷன் எடுக்கும் வீட்டில் இருந்து கால் வர அதை சமாளிக்கிறார். சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வெயிட்டர் சரவணன் மீது சட்னியை ஊற்றி விட அதற்கு தங்கமயில் கோபம் கொண்டு சண்டை போடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.