விஜயாவை அழுது சமாளித்த ரோகிணி… ஃபீல் பண்ணும் கோபி… வசமாக சிக்கிய ராஜீ…
VijayTV: மீனா சொன்ன விஷயத்தை ஸ்ருதி ரவியிடம் சென்று சொல்லி விடுகிறார். ரவி முத்துவிடம் சொல்ல அவர் அண்ணாமலையிடம் சொல்லி விஷயம் விஜயா காதுக்கு செல்கிறது. இது குறித்து விஜயா ரோகிணியை அழைத்து கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் தான் ஏற்கனவே கர்ப்பமாகி அது கலைந்து போனதாக ரோகிணி சொல்லிவிடுகிறார்.
தன்னுடைய தந்தை ஜெயிலுக்கு போன நேரத்தில் தான் கரு உண்டானதாகவும், அந்த விஷயத்தை வீட்டில் சொல்லும் நேரத்தில் அபார்ஷன் ஆனதால் அதை சொல்லவில்லை என அழுது கொண்டே கூறுகிறார். இதை பார்த்த விஜயா கண்ணில் கண்ணீர் வருகிறது.
இதையும் படிங்க: ‘அசுரன்’ படத்திற்காக மாரி செஞ்சத மறக்கவே முடியாது.. வெற்றிமாறன் நெகிழ்ச்சி..
பாக்கியலட்சுமி தொடரில் அனைவரும் சேர்ந்து ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கோபியும் தன்னை ஆசீர்வாதம் செய்யுமாறு வந்து கேட்கிறார். ஆனால் ராமமூர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
பின்னர் எல்லோரும் பரிசு பொருட்களை கொடுக்க கோபி கொண்டு வந்த பரிசை கொடுக்க அதையும் தட்டி விடுகிறார். இதனால் கோபி மனம் உடைந்து தனியாக நிற்கிறார். பின்னர் ஈஸ்வரிடம் வந்து பேச அவர் உனக்கு குடும்பத்து மேல எந்த அக்கறையும் இல்லை. நீ போன போதே இந்த குடும்பத்தோட சந்தோஷ நிம்மதி எல்லாமே போயிடுச்சு. இனியா தற்கொலை முயற்சிக்குப் போயிட்டா என உண்மையைக் கூறி அதிர்ச்சியடைய செய்கிறார்.
இதையும் படிங்க: வசூலை அள்ளும் வாழை, டிமான்ட்டி காலனி 2…. 4 நாள் வசூல் இவ்வளவு கோடியா?….
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் முத்துவேல் வீட்டில் உள்ள பெண்களை நகை எங்கே போச்சு என சத்தம் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபமான வடிவு உங்க பொண்ணோட மானம் போகக்கூடாது என்று அவளுக்கு தான் கொடுத்தோம் என்கிறார். இதில் கடுப்பான முத்துவேல் அவர் மனைவியை அழைத்து வந்து வாசலில் தள்ளுகிறார்.
சக்திவேல் ராஜியை அவர் டியூஷன் எடுக்கும் வீட்டில் பார்க்க கோபத்துடன் வீட்டிற்கு வருகிறார். பின்னர் இருவரும் பாண்டியனிடம் சண்டைக்கு செல்கின்றனர். ராஜியிடம் மீனா என்ன ஆச்சு எனக் கேட்க என்னை டியூஷன் வீட்டில் பார்த்துவிட்டார். அதை வீட்டில் சொல்லி இருப்பார் என கூறுவதுடன் இன்றைய எபிசோடுகள் முடிந்தது