கடைசி நொடியில் ராமமூர்த்தி… மீனாவை திட்டும் விஜயா… கவலையில் இருக்கும் ராஜீ…

by Akhilan |
கடைசி நொடியில் ராமமூர்த்தி… மீனாவை திட்டும் விஜயா… கவலையில் இருக்கும் ராஜீ…
X

#image_title

VijayTV: பாக்கியலட்சுமி தொடரில் பங்க்ஷன் முடிந்த வந்த பின்னர் ராமமூர்த்தி குடும்பத்தினர் அனைவரையும் உட்கார வைத்து பேசிக்கொண்டே இருக்கிறார். பின்னர் எல்லோரும் செல்பி எடுத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். எல்லோரும் தூங்க சென்றுவிட பாக்கியா மற்றும் செல்வி இருவரும் சமையலறையில் இருக்கின்றனர்.

அப்போ அங்கு வரும் ராமமூர்த்தி, செல்வியிடம் எப்போதும் பாக்யா உடனே இருக்க வேண்டும் என்கிறார். பின்னர் பாக்யாவிடம் உனக்கு கோபியை கல்யாணம் செஞ்சு வச்சு தப்பு செஞ்சிட்டேன். நீ எடுக்க முடிவு எப்பயும் சரியாக இருக்கும். நான் உன் கூடவே இருப்பேன் எனக்கு கூறுகிறார். இது கேட்கும் பாக்யா கண்கலங்குகிறார். ரூமில் படுத்திருக்கும் ராமமூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது.

இதையும் படிங்க: விஜய்கிட்ட இத எதிர்பார்க்கவே இல்ல.. மூத்த நடிகருக்கே இப்படி ஒரு நிலைமையா?

சிறகடிக்க ஆசை தொடரில் விஜயா மற்றும் மனோஜ் பயந்து நிற்க ஸ்ருதி சிரித்துக்கொண்டே வருகிறார். இதற்கும் விஜயா மீனாவை தான் திட்டுகிறார். ரவி ஸ்ருதிக்கு டிரஸ் ஒன்று எடுத்துக் கொண்டு வர அது எனக்கு பிடிக்கவில்லை என அவரிடம் சண்டை போட்டுவிட்டு வருகிறார் ஸ்ருதி. இதனால் மீனா வருவதை கவனிக்காமல் இடிக்க அவர் கையில் இருக்கும் எண்ணெய் விழுந்து விடுகிறது.

#image_title

ஸ்ருதி தெரியாம பண்ணிட்டேன் எனக் கூற பரவால்ல நான் பாத்துக்குறேன் என மீனா துணியை எடுக்க செல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் விஜயா வழுக்கி கீழே விழுகிறார். இதைப் பார்த்து குடும்பத்தினர் அங்கு வருகின்றனர். விஜயா மீனாவை திட்டிக் கொண்டிருக்க ஸ்ருதி நான்தான் செஞ்ச இப்ப எதுக்கு அவங்கள திட்றீங்க என்கிறார். இருந்தும் விஜயா மீனாவே சொல்லிக் கொண்டிருக்க ஸ்ருதி கடுப்படித்து விடுகிறார்.

இதையும் படிங்க: மோகன்லால் ஏன் விலகணும்? ரூபஸ்ரீக்கு நடந்த அக்கிரமத்தைப் பாருங்க…

பின்னர் மூவரும் டீ குடித்துவிட்டு அங்கிருந்து செல்கின்றனர். மாடியில் ராஜீ மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ராஜு வருத்தப்பட்டு அழுக, சாரிக்கா என்கிறார். ஆனால் மீனா உன் மேல எந்த தப்பும் இல்லை விடு என கூறிவிடுகிறார். குடும்பத்தினர் சாப்பிட்டு கொண்டு இருக்க மீனா மற்றும் ராஜீயை பாண்டியன் அழைக்கிறார்.

Next Story