ராமமூர்த்தி தவறினார்… கவலையில் பாண்டியன் குடும்பம்… ஓவரா போறீங்க விஜயா..
VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் இரவு முழுவதும் தூங்காமல் நடந்து கொண்டே இருக்கிறார் ராமமூர்த்தி. ஈஸ்வரி எழுந்து தூங்கலையா எனக் கேட்கிறார். இல்லை சாப்பிட்டது ஒரு மாதிரி இருக்கு நான் வெளியில் நடந்துட்டு வரேன் என்கிறார். ஹாலுக்கு போய் வீட்டை சுற்றி பார்த்து கொண்டு இருக்கிறார்.
அப்போ வரும் ஈஸ்வரி ஏன் நடந்துட்டு இருக்கீங்க? சுடுதண்ணி வச்சி தரவா எனக் கேட்கிறார். இல்ல வேணாம். வா தூங்க போகலாமென ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு உள்ளே செல்கிறார். இருவரும் படுத்துவிடுகின்றனர். காலையில் எழுந்து வீட்டினர் வேலை செய்துக்கொண்டு இருக்க பாக்கியா மாமாவை எழுப்புங்க என்கிறார்.
இதையும் படிங்க: வாண்டட் ஆக வலையில் சிக்கிய வெங்கட் பிரபு… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
ஈஸ்வரி ராமமூர்த்தியை எழுப்ப அவர் எழுப்பாமல் இருக்க பதறி பாக்கியாவை அழைக்கிறார். வீட்டில் இருக்கும் எல்லாரும் வந்து பதறிவிடுகின்றனர். செல்வி ஐயா உடல் குளிர்ந்து இருக்கு நம்மளை விட்டு போயிட்டாருமா என்கிறார். டாக்டரை செழியன் அழைத்து வர அவர் வந்து செக் செய்துவிட்டு ராமமூர்த்தி தவறிவிட்டதாக கூறுகிறார்.
சிறகடிக்க ஆசை தொடரில் விஜயாவுக்காக மீனா பத்து போட கேட்டுவிட்டு வந்து ஒத்தரம் கொடுக்க தண்ணியை கொடுக்கிறார். மீனாவை முத்து தடுத்தும் செய்ய விஜயாவிடம் வாங்கிக்கட்டி கொள்கிறார். பரணில் மீனா பொருட்களை தேட அப்போவரும் விஜயா ஸ்டூலை தட்டிவிடுகிறார். கீழே விழ போனவரை முத்து பிடித்துவிட மொத்த மாவும் கொட்டிவிடுகிறது.
இதையும் படிங்க: ஒரு கோடி தேடி வந்தும் உதறித் தள்ளிய அஜித்… ரசிகர்கள் மேல் எவ்வளவு அன்பு?!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் பாண்டியன் கவலையாக இருக்க அவருக்கு பழனி மற்றும் கோமதி ஆறுதல் சொல்கிறார். கதிரிடம் தன் நிலைமையை ராஜீ எடுத்து சொல்கிறார். இருந்தும் கதிர் திட்டிவிடுகிறார். மீனா மற்றும் செந்தில் இடையே அந்த பிரச்னையால் சண்டை வருகிறது. இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.