படம் வேற லெவலா இருக்கும் போலயே! STR 48 கதையை காத்துல பறக்கவிட்ட பிரபலம்

STR 48: சிம்புவின் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் STR 48. அவருடைய 48வது படமாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் நிறுவனம்தான் தயாரிக்கிறது. சிம்புவின் கெரியரிலேயே இந்தப் படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படமாகும்.

அதற்காக சிம்பு தன் சம்பளத்தைக் கூட குறைத்துக் கொண்டார் என்று சொல்லப்பட்டது. இந்தக் கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும் ஆனால் ரஜினி நடிக்க முடியாததால் சிம்பு இந்தக் கதைக்குள் உள்ளே வந்திருக்கிறார் என்றும் நாம் ஏற்கனவே அறிந்த விஷயம்.

இதையும் படிங்க: ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. அந்தப் படத்தை பார்த்துதான் ரஜினி தேசிங்குபெரியசாமியை அழைத்து நாமும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவி பிரபலம் ரக்‌ஷன் தேசிங்கு பெரியசாமியை பற்றியும் STR 48 படத்தை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷன் ஏடியாக பணிபுரிந்தாராம். அப்போது இருந்தே தேசிங்கு பெரியசாமியுடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டதாம்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் நெப்போடிசம்!.. ஆர்ஜே பாலாஜிக்கே இந்த நிலைமையா?..

STR 48 படம் பெரிய அளவில் வர இருக்கிறது என்றும் ராஜமவுலி பாகுபாலி என்ற பிரம்மாண்ட படைப்பை கொடுத்து எப்படி இந்திய அளவில் பேசப்பட்ட இயக்குனராக மாறியிருக்கிறாரோ அதே போல்தான் இந்த STR 48 படமும். இந்த படம் வெளியாகி தேசிங்கு பெரியசாமி கண்டிப்பாக டாப் 5 இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்றும் ரக்‌ஷன் கூறினார்.

மேலும் STR 48 படத்தின் ஒன் லைன் கதை தனக்கு தெரியும் என்றும் அதுவே வேற லெவல் என்றும் கூறி STR 48 படத்தில் ஒரு வேளை நான் நடிக்கலாம் அல்லது ஏடியாகவாவது கண்டிப்பாக இருப்பேன் என்றும் ரக்‌ஷன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகருக்கு அந்த பழக்கமே இல்லையாம்!… ஆனா படத்துக்காக என்ன செஞ்சாரு தெரியுமா?

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it