கர்ப்பமாக இருக்கிறாரா டிடி? வெளியான வளைகாப்பு புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி....!
சீரியல், பாட்டு, டான்ஸ், காமெடி என அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் கொஞ்சமும் எண்டர்டெயின்மென்ட் குறையாத வகையில் வழங்கி வருவதால், விஜய் டிவி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விஜய் டிவி தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஆரம்பகாலத்தில் இருந்தே தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் திவ்ய தர்ஷினி. இவரை ரசிகர்கள் அனைவரும் டிடி என்றே அழைத்து வருகிறார்கள். இவர் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் டிவியில் இவர் நடத்தி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்சி மூலம் டிடிக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது. மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி இதுவரை ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இதுதவிர அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள டிடி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவிலும் பதிவு செய்து வருகிறார்.
திருமணமாகி விவாகரத்தான நிலையில் தற்போது தனியாக வசித்து வரும் டிடி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திடீரென வளைகாப்பு புகைப்படம் வெளியானதால் டிடியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள்.
அதன் பின்னர் அந்த புகைப்படம் புதிய படத்திற்காக எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. அதாவது டிடி தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் ஜீவாக்கு தங்கையாக கர்ப்பிணி பெண்ணாக டிடி நடிக்கிறாராம். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.