தடபுடலாக நடந்த KPY தீனா திருமணம்!… பொண்ணு யாரு தெரியுமா?…

Published on: June 1, 2023
---Advertisement---

விஜய் டிவிக்கு சென்று அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தீனாவும் முக்கியமானவர், சிவகார்த்திகேயன், சந்தானம் வரிசையில் இவரும் தற்சமயம் சினிமாவில் வாய்ப்பை பெற்று வருகிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக இவர் விஜய் டிவிக்கு அறிமுகமானார். அதன் பிறகு மெமிக்ரி செய்வது, ஸ்டேஜ் காமெடிகள் செய்வது என இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பழக்கம் ஏற்பட அதன் மூலம் கைதி படத்தில் வாய்ப்பை பெற்றார் தீனா.

அவரது சொந்த ஊரான திருவாரூரில் மாடி வீடு ஒன்றை கட்டி வந்தார் தீனா. சினிமாவில் சம்பாதித்த காசு மூலம் கட்டி முடித்த அந்த வீட்டிற்கு சமீபத்தில் கடந்த மார்ச் மாதம் கிரஹபிரவேசம் நடந்தது.  இந்த நிலையில் அவரது சொந்தக்கார பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என பேச்சுக்கள் இருந்தது வந்தன.

இந்த பெண் கிராபிக் டிசைனராக பணிப்புரிகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று தனது சொந்த ஊரான திருவாரூரிலேயே திருமணத்தை நடத்தியுள்ளார் தீனா. திருவாரூருக்கு பிரபலங்கள் வந்து வாழ்த்துவது கடினம் என்றாலும் ஊர் செண்டிமெண்டிற்காக திருமணத்தை திருவாரூரில் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் வரவேற்பை வருகிற ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் நடத்த உள்ளார் தீனா.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.