அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய பிரபல தொகுப்பாளினி.... ஒரு எபிசோடுக்கு இத்தனை லட்சமா?

திரையுலகில் டாப் நடிகர் அல்லது நடிகையாக வலம் வருபவர்கள் ஒன்றிரண்டு படங்கள் ஹிட் கொடுத்து விட்டால் போதும் உடனே தங்களின் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விடுவார்கள். தற்போது இதே டெக்னிக்கை தான் தொகுப்பாளர்களும் பாலோ செய்கிறார்கள் போல.
ஆம் அதன்படி விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே அவரது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டாராம். முன்னதாக ஒல்லி பெல்லி என்ற ஷோ மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் பிரியங்கா.
அதனை தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
அந்த சீசனில் இரண்டாவது இடம் பிடித்த பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தான் அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரியங்கா தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பிரியங்கா இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க மட்டும் சுமார் ரூ.2 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.