பிக் பாஸ் பிரியங்காவுக்கு 2வது திருமணம்!.. தாலி கட்டும் போது கண்ணீர் விட்டு அழறாரே!.. மாப்பிள்ளை யார்?

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிக் பாஸ் பிரியங்கா இன்று இரண்டாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் உலா வரும் நிலையில், திருமண வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கி விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட இவர் அமீர், பாவனி காதலுக்கு எல்லாம் தூது சென்றார்.

இந்நிலையில், அமீர், பாவனி திருமணத்துக்கு முன்னதாக இவர் தனது 2வது திருமணத்தை நடத்தி முடித்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். குடும்பத்தினருடன் இணைந்துக் கொண்டு கண்ணீர் மல்க தாலி கட்டிக் கொள்ளும் பிரியங்காவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், திருமணம் குறித்து பிரியங்கா இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இது ஏதாவது ஒரு படத்துக்கான ஷூட்டிங்கா? அல்லது விளம்பரப் படமா? என்றும் ரசிகர்கள் சந்தேகித்து வந்தாலும், பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் என்றே தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்கின்றனர். இந்நிலையில், யாருக்கும் அறிவிக்காமல் திடீரென தனது திருமணத்தை பிரியங்கா நடத்தி முடித்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DIgQDvhzgNr/?igsh=NXdqMWIzN3MwcHZi