விஜய் டிவி புகழுக்கு விரைவில் திருமணம்.. பொண்ணு இவர்தானாம்!..
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவரின் டைமிங் காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமனார். மேலும், இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், புகழ் ஒரு பெண்ணை காதலித்து வருவது தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. புகழின் காதலிக்கு இன்று பிறந்த நாள். எனவே, அவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்னர்.. லவ் யூ’ என புகழ் உருகியுள்ளார்.
இதையும் படிங்கள் அப்படி பாக்காத!.. என்னமோ பண்ணுது!… மனச சுண்டி இழுத்த அனுபமா…..
அவரின் பெயர் ரியா. கேரளாவை சேர்ந்தவர். நடனத்தில் ஆர்வம் உள்ளவர். சிம்புவின் தீவிர ரசிகையாம் அவர். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.