
Cinema News
ஓவர் தலைக்கணத்தில் ஆடும் சின்னத்திரை பிரபலம்..! அடுத்த அஸ்வின் நீங்க தான் போல…. !
மக்களை முழுக்க முழுக்க என்டர்டெயின் செய்யும் விதமாக பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வரும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சின்னத்திரை நடிகர் புகழ்.
இவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக புகழுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் புகழ் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுதவிர கதையின் நாயகனாகவும் ஒரு படத்தில் புகழ் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் புகழ் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது ரசிகர்களிடம் யதார்த்தமாக பழகி வந்த புகழ் சமீபகாலமாக சீன் போட தொடங்கி உள்ளாராம்.
இவருக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்தவுடன் கெத்த காட்ட தொடங்கியுள்ள புகழ் கடை திறப்பு நிகழ்ச்சிகள், படத்தின் ஆடியோ லான்ச் என எங்கு சென்றாலும் பாடிகாட்ஸ் உடன் தான் செல்கிறாராம். மேலும் படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்த உடன் தான் தான் ஹீரோ என்பது போல் நடந்து கொள்வதாகவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே இதேபோல் ஒரு தலை கணத்தில் ஆடிய அஷ்வினை ரசிகர்கள் பங்கம் செய்துள்ள நிலையில், தற்போது புகழுக்கும் அதே நிலை தான் வரப்போகிறது என பலரும் கூறி வருகிறார்கள்.