ராமமூர்த்தி இறப்பால் கதறும் குடும்பம்… முத்து ஸ்ருதி புது கூட்டணியா இருக்கே.. தங்கமயில் வந்தாச்சு..
VijayTV: ராமமூர்த்தி இறந்துவிட்டதாக மருத்துவர் கூறி செல்ல குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. ஜெனி மற்றும் செழியன் ரூமில் சென்று தாத்தாவை பார்த்து அழுது கொண்டிருக்க பாக்யா ஹாலில் அப்படியே உட்கார்ந்து விடுகிறார். ஈஸ்வரி விரித்து ராமமூர்த்தியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறார்.
அப்போ அங்கு வரும் கோபி வீட்டில் முன் கூட்டமாக இருப்பதால் உள்ளே சென்று பார்க்க இனியா அவரை பார்த்து தாத்தா இறந்து விட்டதாக கூறுகிறார். செழியனும் கோபியிடம் அழுது கொண்டே கூற மயக்கமா இருக்கும் என எழுப்ப பார்க்கிறார். ஆனால் ராமமூர்த்தி அசையாமல் இருக்க கோபி அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் வீட்டிற்கு சென்று ராதிகாவிடம் சொல்லி அவரையும் அழைத்து வருகிறார். எல்லோரும் அழுது கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: முதல் நாளே விஜய் என்கிட்ட ஸ்டிரிக்டா சொன்னது! ‘கோட்’ பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்
சிறகடிக்க ஆசை தொடரில் ஸ்ருதியின் அம்மாவை அழைத்து விஜயா அவரைப் பற்றி குறை கூறுகிறார். ஆனால் ஸ்ருதியின் அம்மா அது உங்க பிரச்சனை எனக்கு ஊதி சென்று விடுகிறார். இதனால் கடுப்பான விஜயா அவர் போனதும் திட்டிக் கொண்டிருக்கிறார். ரோகிணிக்கு கால் வர அவர் அம்மா மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் அவர் அதிர்ச்சியில் கிளம்பி விடுகிறார்.
மீனாவை ஸ்ருதியின் அம்மா சரமாரியாக திட்டி செல்கிறார். அப்போ அங்கு வரும் முத்துவிடம் அருகில் இருந்த பெண் இதைக் கூறி விடுகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் மீனா மற்றும் முத்து, ஸ்ருதி மற்றும் ரவியுடன் ரூமிற்குள் சண்டை போடுகின்றனர். பின்னர் வெளியில் வரும் ஸ்ருதி, மீனா சண்டை போட விஜயா அதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.
இதையும் படிங்க: கூலி படத்தில் இணைந்த சூப்பர் நடிகை… எதிர்பார்க்கல இல்ல… இப்படி ஒரு சர்ப்ரைஸ..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் பாண்டியன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கோமதியிடம் உன்கிட்ட சொல்லாமையா இந்த பிள்ளைங்க அத பண்ணுச்சு என்கிறார். எனக்கும் இந்த விஷயம் தெரியாது. என்கிட்டயும் சொல்லல என கூறிவிடுகிறார். தங்கமயில் மற்றும் சரவணன் சென்னையிலிருந்து திரும்பி வருகின்றனர்.
அவர்களிடம் வீட்டில் நடந்த விஷயத்தை கூற பாண்டியனுக்கு சப்போர்ட் செய்து தங்கமயில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் மீனாவிடம் நீங்களாவது ராஜிக்கு சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும் அல்லவா எனக் கேட்கிறார். இதை கேட்டு மீனா கடுப்புடன் நிற்பதுடன் எபிசோட் முடிந்தது.