ராமமூர்த்திக்கு நீர்மாலை எடுத்த பாக்கியா.. மீனா மீது கடுப்பில் ரோகிணி.. கவலையில் மீனா மற்றும் ராஜி..
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி அவரின் அம்மாவுக்கு கால் செய்து முத்து மற்றும் மீனா அங்கு வருவதாக கூறி அவர்களிடம் கிரிஷை காட்ட வேண்டாம் என்கிறார். அதுபோல முத்துமீனா அவரை வந்து பார்த்துவிட்டு பேசுகின்றனர். கிரிஷை தத்தெடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறுகின்றனர்.
பின்னர் அவர்கள் சென்றதும் ரோகிணிக்கு கால் செய்து அவர் அங்கு நடந்த விஷயத்தை கூறுகிறார். இதைக் கேட்டு ரோகிணி கடுப்பாக அவர் அம்மாவும் அவர்கள் பிள்ளையை நன்றாக தான் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார். தொடர்ந்து வீட்டில் ரவி சமைத்துக் கொண்டு இருக்க மீனா மற்றும் ஸ்ருதி பேசிக் கொண்டிருக்கின்றனர். விஜயா அங்கு வர பின்பு சண்டை போடுவதாக சமாளிக்கின்றனர்.
இதையும் படிங்க: கோட் படத்தை பார்க்கப் போனா நீங்கதான் ஆடு!.. மண்ட பத்திரம்!.. புளூசட்டமாறன் விமர்சனம்!…
பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரிடம் கோபி எவ்வளவு கேட்டும் அவர் ராமமூர்த்திக்கு இறுதி சடங்கு செய்வதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. தொடர்ந்து யார் செய்யலாம் என கேள்வி எழுப்ப பாக்கியா தான் செய்ய வேண்டும் என்கிறார். தான் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என கோபி சத்தம் போடுகிறார்.
ஒரு கட்டத்தில் இறந்த வீட்டில் சண்டை வேண்டாம் எனக் கூறி கோபியை அனைவரும் சமாதானம் செய்கின்றனர். பாக்கியா ராமமூர்த்திக்கு இறுதி மரியாதை செலுத்த தண்ணி எடுத்து வர செல்கிறார். ஜெனி கர்ப்பமாக இருப்பதால் செழியனை எதுவும் செய்யக் கூடாது என கூறிவிடுகின்றனர்.
இதையும் படிங்க: முதல் நாள் வசூலே இவ்வளவு கோடியா?!. உலக அளவில் மாஸ் காட்டும் கோட்!…
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் மீனா கொடுக்கும் தண்ணியை பாண்டியன் வாங்கி கொள்ளவில்லை. தங்கமயிலிடம் இருந்து வாங்கி கொடுக்கிறார். இதை எடுத்து யாரும் பேசாமல் இருக்க மீனா மற்றும் ராஜி ரூமுக்குள் சென்று விடுகின்றனர். தங்கமயில் அம்மா கால் செய்து நகை குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நகையை அத்தை பேங்கில் வைத்து விட்டதாக கூறுகிறார். இது தெரிஞ்சா வீட்டில என்ன வெளியே அனுப்பிவிடுவார்கள் எனக் கூற சரவணன் அப்போது வந்துவிடுகிறார். என்ன விஷயம் ஏன் அப்படி சொன்ன எனக் கேட்க ரூம் விஷயத்தை கூறிவிடுகிறார். இதைத் தொடர்ந்து ராஜி மற்றும் மீனா இருவரும் கவலையாக பேசிக் கொண்டிருக்க அதை கோமதி கேட்டுவிடுகிறார்.