மனோஜுக்கு கிடைத்த பல்ப்… பாக்கியாவாக மாறிய ராதிகா… பிரச்னையில் சிக்கிய கதிர்!..

vijay
VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்பு.
சிறகடிக்க ஆசை
மனோஜ் மற்றும் விஜயா இருவரும் கோயிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மூன்று சுற்று சுற்ற வேண்டும் எனக் கூற மனோஜ் கை சுடுகிறது என பதறிக் கொண்டே பரிகாரத்தை செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கோயிலுக்கு வரும் மீனா மற்றும் முத்து இதை பார்த்து விடுகின்றனர்.
உடனே முத்து தன்னுடைய மொபைலில் இதை வீடியோவாக எடுத்து விட்டு வீட்டுக்கு வருகிறார். அங்கு ஸ்ருதி மற்றும் ரவி அண்ணாமலை இருக்கும்போது இதை போட்டுக்காட்ட எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். விஜயா வர அவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கடையிலிருந்து வரும் ஆள் மழைக்கு ஒதுங்கிய சின்ன குழந்தை முட்டையில் விளையாட்டுத்தனமாக வரைந்து விட்டதை கூற விஜயா ஷாக் ஆகி பார்க்கிறார்.
பாக்கியலட்சுமி
ராதிகா ஈஸ்வரி செய்ததால் மனம் உடைந்து இருக்க அவருக்கு பாக்கியா ஆறுதல் கூறுகிறார். பின்னர் செல்வி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா முதலில் ரகசியமடைந்த போது இருந்த நிலையில் தற்போது ராதிகாவும் மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்கு செல்கிறார்.
வீட்டில் அம்மாவிடம் நடந்த உண்மையை கூற அவரும் ராதிகாவுக்கு ஆறுதல் சொல்கிறார். கோபியை சாதாரண ரூமிற்கு மாற்றிவிட்டதாக கூறி குடும்பத்துடன் பார்க்க சொல்கின்றனர். ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா மூவரும் கோபியை பார்த்து ஆறுதல் சொல்கின்றனர். வெளியில் வரும் ஈஸ்வரி பாக்கியாவை பார்க்க கூற அவர் மறுத்து வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். வாசலில் ராதிகாவை பார்க்க அவரை உள்ளே அழைத்து வர ஈஸ்வரி விட மறுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
ராஜி மற்றும் கதிரை போலீஸ் நிலையம் அழைக்கும் காவலர் கண்ணனை பிடித்து விட்டதாக கூறுகின்றனர். அவர் தான் ராஜியின் லவ்வர் என சொல்ல பார்க்க கதிர் இவன் என்னுடைய நண்பன் ராஜியை அழைத்து வர மட்டும் தான் இவனிடம் கூறினேன் என விஷயத்தை மாற்றி விடுகிறார். அந்த நேரத்தில் நகையை திருடியதாக கூறிவிடுகின்றனர்.

bakkiyalakshmi
கண்ணன் நகையை விற்று செலவு செய்து விட்டதாக கூற அவனிடம் ஏதும் சொத்து இருக்கிறதா என பார்த்து அதற்கான பணத்தை வாங்கி தருவதாக காவலர் நம்பிக்கை கொடுத்து அனுப்புகிறார். வீட்டிற்கு வரும் ராஜி மற்றும் கதிர் பேசிக் கொண்டிருக்கின்றனர். கதிர் வீட்டில் விட்டுச் சென்ற பெண் காணவில்லை என்ன கூறி அவர் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க, கதிரை போலீசார் அரெஸ்ட் செய்து அழைத்துச் செல்கின்றனர்.