மீனாவிடம் உண்மையை சொன்ன பார்வதி… ராதிகாவிடம் உளறிய கோபி… சிக்கிய கதிர்!..

by Akhilan |
Vijay serials
X

Vijay serials

VijayTV: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்பு.

சிறகடிக்க ஆசை

மனோஜியின் கடையில் வேலை பார்க்கும் ஆள் வந்து முட்டை விஷயத்தை சொல்லிவிட்டு செல்கிறார். இதைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் சிரிக்க விஜயா மனோஜை திட்டிவிட்டு செல்கிறார். மீனாவை பின் தொடரும் ஆள் அவரிடம் வந்து முத்து சொன்னது போல் சொல்லி விடுகிறார். இதில் கடுப்பாகும் மீனா முத்துவிற்கு கால் செய்து கூறுகிறார்.

முத்து மீனாவிடம் பெப்பர் ஸ்ப்ரே வாங்கி வைத்துக்கொள் மீண்டும் அந்த ஆள் வந்தால் என்னிடம் சொல் என கூறிவிடுகிறார். ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ஃபங்ஷன் கிளம்புவதாக இருக்க அந்த நேரத்தில் ரவியின் பாஸ் கால் செய்து வேலை இருப்பதாக கூறிவிடுகிறார். இதனால் ஸ்ருதி ரவியை திட்டி விட்டு கிளம்பி விடுகிறார்.

ஸ்ருதி சென்ற அதே பங்ஷனுக்கு ரவி கேட்டரிங் ஆர்டர் எடுத்து வர அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ஸ்ருதி கோபத்தில் இருக்க அவரை சமாதானப்படுத்த ரவி முயன்றும் முடியாமல் போகிறது. பார்வதிக்கு மீனா பூ கொடுக்க செல்ல இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணி வந்து பணம் கொடுத்த விஷயத்தை உளறி விடுகிறார்.

Also read: விஜய்க்கு எதிரா மறைமுகமா கேம் ஆடும் ரஜினி… இதெல்லாம் அவருடைய ஸ்ட்ரேஜிதானா?

பாக்கியலட்சுமி

ஈஸ்வரியை சாப்பிட போராடி அனுப்பும் பாக்கியா கோபியை பார்க்க ராதிகாவை உள்ளே அனுப்புகிறார். சலித்துக் கொண்டு உள்ளே செல்லும் ராதிகா கோபியிடம் பேச அவர் பாக்கியா இருப்பதாக நினைத்துக் கொள்கிறார். தன்னை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு மனமுருகி நன்றி சொல்கிறார்.

இந்த நேரத்தில் ஈஸ்வரி வந்துவிட ராதிகாவை பிடித்து வெளியில் அழைத்து வந்துவிடுகிறார். செழியன் மற்றும் ஈஸ்வரி இருவரும் ராதிகாவை போக சொல்ல அவரும் வெளியில் வருகிறார். அங்கு பாக்கியா பேசிக் கொண்டிருக்க ராதிகா தன்னுடைய மன வருத்தத்தை சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2

கதிரை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்து செல்ல கோமதி அழுதுக்கொண்டு இருக்கிறார். பாண்டியன், செந்தில் போலீஸிடம் பேசிவிட்டு வெளியில் வருகின்றனர். ராஜி மீனாவிடம் கதிர் அப்படி செய்யிற ஆள் இல்லை என அழுதுக்கொண்டு இருக்கிறார்.

pandian stores2

pandian stores2

கதிரை அடித்துக்கொண்டு இருக்கும் போலீஸ் உன் பிரண்ட் யாரும் இதில் கூட்டா எனக் கேட்கிறார். கதிருக்கு அப்போது நியாபகம் வர கார் ட்ரிப்பில் அந்த பசங்களை குறித்து முழுமையாக சொல்கிறார். பாண்டியன் வீட்டுக்கு வர சக்திவேல் மற்றும் குமார் இருவரும் கதிர் குறித்து அபாண்டமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதில் கடுப்பாகும் பாண்டியன் சண்டைக்கு போக ராஜி கதிருக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

Next Story