latest news
சிக்கலில் ரோகிணி… ராதிகாவை வெளியேற்றிய ஈஸ்வரி… ஹீரோயிசம் காட்டிய கதிர்!..
VijayTV: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்களில் இன்றைய எபிசோடுகளின் தொகுப்பு.
பாக்கியலட்சுமி: கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சர்ஜரி முடித்திருக்க அவரைக் காண ராதிகா வந்திருக்கிறார். ஆனால் ஈஸ்வரி ராதிகாவை பார்க்க கூடாது என கூறி உன்னால் தான் அவன் இந்த நிலையில் இருக்கான் என சத்தம் போடுகிறார். மற்றவர்கள் எடுத்துக் கூறியும் ஈஸ்வரி கேட்காமல் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: தெலுங்கை காப்பி அடிக்கணும்.. அப்போதான் வருவேன்.. தனுஷுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்!..
வெளியில் இருக்கும் ராதிகாவிடம் பாக்கியா வந்து பேச கோபிக்கு உடம்பு முடியாமல் போனது உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்கிறார். எனக்கு அவர் கால் செய்திருந்தார் முதலில் நான் எடுக்கவில்லை. பின்னர் வாய்ஸ் நோட் போட்டு அதன் பின்னர்தான் அவரை மருத்துவமனையில் சேர்த்தேன் என பாக்கியம் உண்மையை கூறுகிறார். மருத்துவமனையில் செல்வி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை: மீனாவிற்கு ஆர்டர் கிடைத்திருக்க அதற்காக பிரியாணி செய்து அனைவருக்கும் கொடுக்கின்றனர். மனோஜ் விரதம் இருக்கக் கூறியதால் விஜயாவால் சாப்பிட முடியவில்லை என கோபத்தில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து ரோகிணியை வந்து பார்க்கும் கறிக்கடைக்காரர் மீனா அந்த விஷயத்தை கூறிவிடுகிறார்.
அவரை ரோகிணி கடையை மாற்றி விடக் கூற என்னால் அப்படியெல்லாம் செய்ய முடியாது. இனிமேல் மீனா வந்தால் கண்டிப்பாக நான் உண்மைதான் சொல்லுவேன் என கூறிவிட்டு செல்கிறார். வித்யா நீ மாட்டிக்க போற நேரம் தூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன் என்கிறார். ரோகிணி தன் வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஜிவி காட்டுல மழையா இருக்கே… அடுத்த படம் இந்த பெரிய ஸ்டாரோட தானாம்!..
சரவணன் தங்கமயிலை இன்டர்வியூ செய்ய அழைத்து செல்கிறார். பயத்தில் இருக்கும் தங்கமயில் தான் எம்ஏ படித்திருப்பதாக பள்ளி முதல்வரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பின்னர் கோமதி தன்னுடைய மருமகள்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றார்.