மூணுல ஒன்னு.. வெளியேறிய எழில்… உளறாதீங்க மனோஜ்… சிக்க போகும் கதிர்!..
by Akhilan |
X
பாக்கியலட்சுமி தொடரில் எழில் மற்றும் அமிர்தா வீட்டை விட்டு கிளம்புகின்றனர். ஈஸ்வரி நான் உன்னை போக சொல்லலையேடா. சொல்றதை கேளுனு தான் சொன்னேன் எனக் கண் கலங்குகிறார். ராமமூர்த்தி நிம்மதியே தர மாட்டியா எனக் கேட்கிறார்.
நீங்க எப்ப வேண்டாலும் வரலாம் தாத்தா என்கிறார். இனியா அழுக அவரிடமும் ஆறுதல் சொல்கிறார். பின்னர், பாக்கியாவை பார்த்து என்னை போக சொல்லிட்டல நான் போறேன்மா எனக் கலங்குகிறார். இப்போவே கிளம்பி போ என மீண்டும் கூறுகிறார் பாக்கியா. எழில் சரியென எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார்.
இதையும் படிங்க: தனுஷ் சொன்ன அந்த ரகசியம்… ட்ரோல் ஆக சிவகார்த்திகேயனின் பேச்சு தான் காரணமா?
சிறகடிக்க ஆசை தொடரில் மீனா மற்றும் முத்து வெற்றி பெற்று வீட்டுக்கு மேளதாளத்துடன் வருகின்றனர். விஜயா மனோஜிடம் நீங்க ஜெயிக்கலையா எனக் கேட்க அவர்கள் இல்லை எனக் கூறிவிடுகின்றனர். முத்து மற்றும் மீனாவுக்கு ஆரத்தி எடுக்கின்றனர். விஜயா நீங்க சரியா பதில் சொல்லலையா எனக் கேட்கிறார். அவருக்கு கேள்வி கேட்க தெரியலைமா என்கிறார். முத்து மற்றும் மீனா தங்கள் வெற்றியை நினைத்து சந்தோஷப்படுகின்றனர்.
மனோஜ், முத்து ஏமாத்தி ஜெயிச்சிட்டாங்க என்கிறார். அவன் உளறுனா அதுக்கு பாவப்பட்டு பரிசு கொடுத்துட்டாங்க. நாங்க சண்டையே போடலை. நாங்க தான் சிறந்த ஜோடி என்கிறார். உடனே முத்து அப்பா சண்டையே போடாம ஒரு ஜோடி இருந்தா அவங்களுக்கு உள்ளே எதோ மறைக்கிறாங்க என்கிறார். மனோஜ் சமாளித்து அங்கிருந்து சென்றுவிடுகிறார். விஜயா இவங்களுக்குள் எதோ ரகசியம் இருக்கணும் எனப் பேசிக்கொள்கிறார்.
இதையும் படிங்க: இளையராஜாவோட பயோபிக் சூட்டிங் பரபர அப்டேட்… இயக்குனர் சொன்ன அந்தத் தகவல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஹனிமூனில் மயில் மற்றும் சரவணன் என்சாய் செய்து கொண்டு இருக்கின்றனர். தங்கமயில் வாட்ஸப் குரூப் ஒன்றை ஓபன் செய்து இருக்க அதை மீனா கலாய்த்து கொண்டு இருக்கிறார். வீட்டில் பாண்டியன் கடை கணக்கை அரசியை வைத்து பார்த்து கொண்டு இருக்கிறார். அப்போ அவர் கடை காசில் ஆயிரம் குறைவதாக கூறுகிறார்.
Next Story