
Cinema News
பிக்பாஸை காலி செய்த படையப்பா….என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் நல்ல டி.ஆர்.பி உண்டு. அதேபோல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களுக்கும் நல்ல டி.ஆர்.பி உண்டு. ஆனாலும், டி.ஆர்.பி-யில் எப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் டிவிதான்.
சன் டிவி டி.ஆர்.பியை தாண்ட வேண்டும் என்றுதான் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ஆனால், விஜய் டிவி டி.ஆர்.பி. சன் டிவியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலமையோ தலை கீழாக மாறிவிட்டது.
தீபாவளியன்று பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் 5 மணி நேரம் ஒளிபரப்பானது. சன் டிவியோ டாக்டர் மற்றும் படையாப்பா படத்தை நம்பி களம் இறங்கியது. சன் டிவியின் டி.ஆர்.பி 1100 ஆக இருந்த நிலையில் டாக்டர் மற்றும் படையப்பா படத்தால் 1400ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், 1000 புள்ளியாக இருந்த விஜய் டிவியின் டி.ஆர்.பி 800ஆக குறைந்துவிட்டது. கமல்ஹாசனை நம்பி பிக்பாஸ் நிகழ்ச்சியை 5 மணி நேரம் காட்டி டி.ஆர்.பியில் கீழே சென்றுவிட்டது விஜய் டிவி.

doctor
இதில் ஆச்சர்யம் என்னவெனில், டாக்டர் படத்திற்கு கிடைத்த டி.ஆர்.பிக்கு இணையான புள்ளியை படையப்பா படமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.