காலை வாரிய கேரளா, ஆந்திரா, கர்நாடகா!. வசூலை பெறாத கோட் அப்செட் ஆன விஜய்!..
Goat: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் விஜய். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் விஜயை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியது கில்லி படம்தான். தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூலை தொட்ட படம் அது.
சூப்பர்ஸ்டாராக ரஜினி இருந்தாலும் விஜயும் ஒரு பக்கம் தொடர் வெற்றிகளை கொடுத்து வந்தார். விஜய்க்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருப்பதால் அவரின் படங்கள நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் சுமார் என சொன்னாலும் அது வசூலை பாதிக்காது. வாரிசு, பீஸ்ட், லியோ ஆகிய படங்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூலை பெற்றது.
இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் வாடிவாசல்!.. லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!.. பரபர அப்டேட்!…
கடந்த சில வருடங்களாகவே விஜயின் படங்கள் குறைந்த பட்சம் 300 கோடி வசூலை தாண்டி வருகிறது. ஒருகட்டத்தில் ரஜினி படங்களின் வசூலையும், அவரின் சம்பளத்தையும் விஜய் ஓவர்டேக் செய்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் கோட்.
லியோ படத்திற்கு அதிக ஹைப் ஏறியதால் படத்தின் வசூலை அது பாதித்தது. எனவே, கோட் படம் பற்றி எந்த அப்டேட்டையும் வெங்கட்பிரபுவோ, அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவோ சொல்லவில்லை. படம் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பே பேட்டிகள் கொடுத்தார்கள்.
கடந்த 5ம் தேதி கோட் திரைப்படம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெளியானது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என பேசினார்கள். ஆனால், அது நடக்கவில்லை. வழக்கமாக விஜயின் படங்கள் கேரளாவில் நல்ல வசூலை பெறும்., ஆனால், கோட் படத்திற்கு அங்கும் வரவேற்பு இல்லை. இது விஜயையே அப்செட் ஆக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு அனிருத் போட்ட பக்கா பிளான்…! செமயா ஒர்க் அவுட் ஆகியிருக்கே..!
ஆந்திராவில் மழை காரணமாக வசூல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. கர்நாடகாவிலும் பெரிய வரவேற்பு இல்லை. ஹிந்தியிலும் பெரிய வசூல் இல்லை. தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் கோட் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுதான் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆறுதலை கொடுத்திருக்கிறது.
முதல் நாளில் இப்படம் 126 கோடி வசூல் செய்ததாக ஏஜிஎஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் 4 நாட்கள் ஆகியும் மொத்த வசூல் பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. எனவே, உண்மையான வசூல் என்ன என்பது தெரியவில்லை.