விஜய் ரசிகர்கள் தெம்பா காலரை தூக்கி விட்டு சுத்தலாம்!.. இவர் தான் ‘வாரிசு’ படத்துக்கே ஒரு பெரிய ஹைப்..
பொங்கல் தினத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் வாரிசு மற்றும் துணிவு படத்தை எதிர்பாட்ர்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் தான் ஏராளம். இவர்களுக்கு இருக்கும் போட்டியில் இணையமே வெடித்து சிதறிடும் போல.
அந்த அளவுக்கு மாறி மாறி விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தங்களை தானே வாரி தூற்றுகின்றனர். ஆனால் விஜய் அஜித் இருவருமே அவரவர் வேலைகளை முடித்து விட்டு ஜாலியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். இந்த இருபடங்களின் தியேட்டர் பிரச்சினை தான் இப்போது தலையாய பிரச்சினையாக மாறிவருகிறது.
துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் ரிலீஸ் செய்யும் நிலையில் சமீபத்தில் தில் ராஜு உதய நிதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வாரிசு படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனமே ரிலீஸ் செய்யும் என்ற செய்தி வெளியானது.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் கண்டிப்பாக வாரிசு படம் தான் ரிலீஸுக்கு பிறகு அதிக தியேட்டர்களை தக்க வைக்கும் என கூறியிருக்கிறார். அவர் யாருமில்லை. ரட்சகன், ஸ்டார், துள்ளல், ஜோடி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ப்ரவீன் காந்தி தான்.
துணிவு ரெட் ஜெயண்ட் பக்கம் போனாலும் எப்போ வாரிசு படத்தில் சிம்பு வந்தாரோ அப்பொழுதே வாரிசு படம் தப்பிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு சிம்புவின் குரலில் அமைந்த தீ தீ தளபதி பாடல் ஒரு ஹைப்பை கிரியேட் செய்து விட்டது.
பொங்கல் அன்று சும்மாவே முரட்டு காளைகளாக இருக்கும் நம் ரசிகர்கள் கதை பிடிக்குதோ இல்லையோ இந்த பாடலை கேட்டாலே சும்மா வெறி கொண்டு அலைவான். ஆகவே இந்த பாடலுக்காகவே வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்களை கொடுக்கவேண்டிய நிலைக்கு வந்து விடும். ஆகவே விஜய் ரசிகர்கள் தெம்பா காலரை தூக்கி விட்டு சுத்தலாம் என்று பிரவீன் காந்தி கூறினார்.