தமிழுக்கு தகிட தகிட தான்...! முழுசா தெலுங்கு படமாக மாறிய ’வாரிசு’...

by Rohini |
vijay_main_cine
X

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா, யோகிபாபு உட்பட பலரும் நடிக்கின்றனர்.

vijay1_cine

படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் படக்குழு வெளியிட்டனர். அதில் விஜய் பார்ப்பதற்கு முன்பு இருந்த படங்களை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.

viay2_cine

மேலும் வலைப்பேச்சு பிஸ்மி வாரிசு படத்தின் செட் பற்றி அண்மையில் பேசியிருந்தார். அந்த செட்டில் போய் பார்க்கும் போது கலர் கலராக வித்தியாசமாக செட்டை அமைத்திருந்தனர். பார்ப்பதற்கு தமிழ் படம் போல தெரியவில்லை.

vijay3_cine

அச்சு அசலாக தெலுங்கு படம் போன்ற பிம்பத்தை தான் ஏற்படுத்துகிறது என்று கூறினார். இயக்குவது தெலுங்கு இயக்குனர் , நடிகை கன்னட நடிகை, நடித்தவர்களில் பலர் தெலுங்கிலும் பிரபலம். ஆகையால் படம் எந்த மாதிரி வரப் போகிறது என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Next Story