Categories: Cinema News latest news

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. அடுத்தடுத்து லீக் ஆகும் வாரிசு வீடியோக்கள்… அப்செட்டில் தளபதி விஜய்.!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது “வாரிசு” திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை கொடுத்தாலும், விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை. ஆதலால், இந்த திரைப்படம் எப்படியும் பெரிய வெற்றியாக கொடுக்க வேண்டும் என்று படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது.

இப்படம் தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- காலம் போன கடைசியில இதெல்லாம் தேவைதானா சார்.?! எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில்….

பெரிய ஹீரோ படம் என்பதால் ஷூட்டிங்கில் கடும் கட்டுப்பாடு நிலவி வருகிறது. இருந்தும் சூட்டிங் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் லீக் ஆகி வந்தன. விஜயின் லுக், மற்ற கதாபாத்திரங்களின் லுக் என அவ்வபோது வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தின் சூட்டிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘சரத்குமார் ஸ்ட்ரக்சரில் படுத்திருக்க மருத்துவராக பிரபு இருக்கிறார். ஸ்ட்ரெச்சரை விஜய் தள்ளி கொண்டு செல்கிறார். ‘ இந்த காட்சி இணையத்தில் வெகுவைரலாக பரவி வருகிறது.

வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடுத்தடுத்து காட்சிகள், புகைப்படங்கள் வெளியாவது விஜய்க்கு தெரிந்தால், அந்த செய்தி விஜயை அப்செட் ஆக்கிவிடும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Published by
Manikandan