“அன்போ? அடியோ? எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சி கொடுக்கனும்”… வெளியானது “வாரிசு” டிரைலர்…

Varisu
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த “வாரிசு” படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர்.

Varisu
பல மாதங்களுக்கு முன்பே “வாரிசு” படம் ஒரு பேமிலி டிராமா என்ற செய்தி வெளியே கசிந்துவிட்டது. அதன் படி “வாரிசு” திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது இது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை என்றுதான் தெரியவருகிறது.

Varisu
மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் தந்தை சரத்குமார். அவருடைய மூன்றாவது மகனான விஜய் அவருக்குப் பின் அவரின் தொழிலுக்கு வாரிசாக வருகிறார். தொழில் பல போட்டிகள் எழ, எதிரிகளால் பல சதிகள் நடக்கிறது. அந்த சதியால் விஜய்யின் குடும்பம் பிரிந்துபோகிறது. இதனை தொடர்ந்து விஜய் தனது தொழில் எதிரிகளை அழித்தாரா? தனது குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? என்பதுதான் கதையாக இருக்கும் என வியூகிக்க முடிகிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் இதோ…