More
Categories: Cinema News latest news tamil cinema gossips

விஜய் vs அஜித்.! இதெல்லாம் சொல்லி வச்சி பண்றாங்களா.? புகைப்படங்களால் குழப்பத்தில் ரசிகர்கள்..,

தமிழ் சினிமாவில் எப்போதும் இருதுருவ அரசியல் இருந்து கொண்டே தான் இருக்கும். அது எம்ஜிஆர் – சிவாஜியாக இருந்தாலும் சரி, ரஜினி-கமல்-ஆக இருந்தாலும் சரி. அல்லது தற்போதைய அஜித்-விஜய் ஆக இருந்தாலும் சரி. அந்தந்த நடிகர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ ஆனால் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Advertising
Advertising

சமீபகாலமாக இந்த சினிமா அரசியல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதாவது விஜய் படம் பற்றிய செய்தி ஏதேனும் வெளிவந்தால் அன்றைய தினம் அஜித் பற்றிய செய்தி வெளியாகிவிடுகிறது. அதேபோல அஜித் படம் பற்றிய செய்தி வெளியானால் விஜய் சம்பந்தப்பட்ட செய்தி வெளியாகி விடுகிறது.

அப்படித்தான் வலிமை ரிலீஸ் சமயத்தில், விஜய் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பீஸ்ட் ரிலீஸ் சமயத்தில், அஜித்குமார் அடுத்து நடிக்கும் அவரின் 61வது திரைப்பட லுக் புகைப்படங்கள் வைரலானது. இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதேபோல் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

நேற்று காலை வெள்ளை சட்டையுடன் அஜீத் ஹைதிராபாத்தில் உள்ள தொழிலாளர்களுடன் இருக்கும் புகைப்படம் மிகவும் வைரலானது. ஹைதராபாத்தில் தான் அஜித் 61வது பட ஷூட்டிங்கின் நடைபெற்று வருகிறது. அங்கு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான அதேசமயம், மாலை, விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்து வந்தார்.

இதையும் படியுங்களேன்  – ரஜினி பார்த்து பயந்த நடிகர்களை தெரியுமா.?! இவரெல்லாம் இந்த லிஸ்ட்ல இருக்காரா..?

அப்போது விஜயும் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இதனை பார்க்கையில் இது இந்த சம்பவங்கள் எதேச்சையாக நடக்கிறதா? அல்லது திட்டம்போட்டு யாரேனும் இந்த புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனரா? என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர்.

 

Published by
Manikandan

Recent Posts