20 முறை விஜயுடன் மோதிய தனுஷ் படங்கள்... ஜெயித்தது யாரு? வாங்க பார்க்கலாம்..

Dhanush, Vijay
தளபதி விஜய் படங்களுடன் மோதிய தனுஷ் படங்கள் 20 தடவை மோதியுள்ளன. ஜெயித்தது யாருன்னு சொல்லவே வேண்டாம். உங்களுக்கே தெரியும். இருந்தாலும் வாங்க பார்ப்போம்.
2002ல் விஜய்க்கு தமிழன், தனுஷூக்கு துள்ளுவதோ இளமை படங்கள் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர். 2003ல் தனுஷூக்கு காதல் கொண்டேன் படமும், விஜய்க்கு புதிய கீதை படமும் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர்.
இதையும் படிங்க... தலைவர் 171 படத்திலிருந்து அவரை தூக்க காரணம் ரஜினியா?!.. பிரபலம் சொல்லும் புதுத்தகவல்
அதே ஆண்டில் விஜய்க்கு திருமலை படமும், தனுஷூக்கு திருடா திருடி படமும் ரிலீஸ். தனுஷோட கேரியரிலேயே இதுதான் முக்கியமான படம். அதே போல தான் விஜய்க்கும். இங்கு ரெண்டு பேருமே வின்னர்.
2004ல் விஜய்க்கு மதுர படமும், தனுஷூக்கு சுள்ளான் படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2005ல் விஜய்க்கு திருப்பாச்சி, தனுஷ்க்கு தேவதையைக் கண்டேன் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் படம் வெள்ளி விழா கண்டு வெற்றி பெற்றது. இதுல விஜய் தான் வின்னர். அதே ஆண்டில் விஜய்க்கு சிவகாசி, தனுஷூக்கு அது ஒரு கனாக்காலம் படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.
2006ல் விஜய்க்கு போக்கிரி, தனுஷூக்கு திருவிளையாடல் ஆரம்பம் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். இது 200 நாள்களைக் கடந்து ஓடியது. 2007ல் தனுஷூக்கு வெற்றி மாறனின் இயக்கத்தில் பொல்லாதவன் படமும், விஜய்க்கு அழகிய தமிழ்மகன் ரிலீஸ். இதுல விஜய் முதன் முதலாக இரட்டை வேடம். ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதுல தனுஷ் தான் வின்னர்.
2008ல் விஜய்க்கு குருவி படமும், தனுஷூக்கு யாரடி நீ மோகினி படமும் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர். 2009ல் விஜய்க்கு வில்லு, தனுஷூக்கு படிக்காதவன் படம் ரிலீஸ். இதுல தனுஷ் தான் வின்னர்.

Vettaikkaran
2009ல் விஜய்க்கு வேட்டைக்காரன் படமும், தனுஷூக்கு குட்டி படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2011ல் விஜய்க்கு காவலன் படமும், தனுஷூக்கு ஆடுகளம் படமும் ரிலீஸ். பாடல்கள் எல்லாமே செம மாஸ். இதுல இருவருமே வின்னர்.
அதே ஆண்டில் விஜய்க்கு வேலாயுதம் படமும், தனுஷூக்கு மயக்கம் என்ன படமும் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2013ல் விஜய்க்கு தலைவா படமும், தனுஷூக்கு மரியான் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம் தான். 2015ல் விஜய்க்கு புலி, தனுஷூக்கு தங்கமகன் ரிலீஸ். இதுல ரெண்டுமே சுமார் ரகம் தான்.
2017ல் விஜய்க்கு அட்லீ இயக்கத்தில் மெர்சல் படமும், தனுஷூக்கு வேலையில்லா பட்டதாரி 2ம் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். மெர்சலில் விஜய்க்கு 3 வேடம். முதன் முதலாக 200 கோடி வசூல்.

Vadachennai
2018ல் விஜய்க்கு சர்கார், தனுஷூக்கு வடசென்னை படமும் ரிலீஸ். இதுல ரெண்டு பேருமே வின்னர் தான். 2019 அக்டோபரில் விஜய்க்கு பிகில், தனுஷூக்கு அசுரன் ரிலீஸ். இதுல ரெண்டு பேருமே வின்னர். விஜய்க்கு முதன் முதலாக 300 கோடி வசூலை ஈட்டிய படம் இதுதான்.
2022ல் விஜய்க்கு பீஸ்ட், தனுஷூக்கு மாறன் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 250 கோடி வசூல். 2023ல் விஜய்க்கு வாரிசு, தனுஷூக்கு வாத்தி ரிலீஸ். இதுல ரெண்டு படங்களும் வெற்றி. ஆனால் விஜய் தான் வசூலில் வின்னர். 300 கோடி வசூல்.