இளைய தளபதியாக இருந்து தளபதியான விஜய்க்கும், லிட்டில் சூப்பர்ஸ்டாராக இருந்து எஸ்டிஆராக மாறிய சிம்புவுக்கும் இடையே படங்கள் மோதினால் எப்படி இருக்கும்? யாரு ஒஸ்தின்னு பார்ப்போமா?
2002ல் விஜய்க்கு பகவதி, சிம்புவுக்கு காதல் அழிவதில்லை ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2003ல் விஜய்க்கு புதிய கீதை, சிம்புவுக்கு தம் படங்கள் ரலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். அதே ஆண்டில் விஜய்க்கு திருமலை, சிம்புவுக்கு அலை படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். 2004ல் விஜய்க்கு கில்லி, உதயா ரிலீஸ். சிம்புவுக்கு குத்து படம் ரிலீஸ். இதுல கில்லி மட்டுமே சூப்பர். 200 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதனால் விஜய் தான் வின்னர்.
2006ல் விஜய்க்கு ஆதி, சிம்புவுக்கு சரவணா படங்கள் ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். 2008ல் விஜய்க்கு வில்லு, சிம்புவுக்கு சிலம்பாட்டம் ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். 2011ல் விஜய்க்கு நண்பன், சிம்புவுக்கு ஒஸ்தி படங்கள் ரிலீஸ். ரெண்டுமே ரீமேக் படங்கள். இதுல விஜய் தான் வின்னர். 2012 விஜய்க்கு துப்பாக்கி, சிம்புவுக்கு போடா போடி படங்கள் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர். அப்பவே துப்பாக்கி படம் 100 கோடிக்கும் அதிகமா வசூல் பண்ணியதாம்.
2015ல் விஜய்க்கு புலி, சிம்புவுக்கு வாலு படங்கள் ரிலீஸ். இதுல சிம்பு தான் வின்னர். 2016ல் விஜய்க்க தெறி, சிம்புவுக்கு இது நம்ம ஆளு ரிலீஸ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் பண்ணிய படம் தெறி தான். அதனால விஜய் தான் வின்னர்.
2018ல் விஜய்க்கு சர்க்கார், சிம்புவுக்கு செக்கச்சிவந்த வானம் படங்கள் ரிலீஸ். இதுல 260 கோடியை வசூல் செய்த விஜய் தான் வின்னர். 2022ல் விஜய்க்கு மாஸ்டர், சிம்புவுக்கு ஈஸ்வரன் ரிலீஸ். இதுல விஜய் தான் வின்னர்.
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…
Biggboss Tamil:…
Biggboss Tamil: …
ஏ ஆர்…