விஜயின் நடிப்பில் ரீமேக்காகும் சத்யராஜின் மெகா ஹிட் படம்!..இயக்குனரே ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கோங்க!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரவிருப்பதாக படக்குழு தெரித்துள்ளது.
இந்த படத்தை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் இணைகிறார் நடிகர் விஜய். இப்படி அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் விஜயை நம்பி பிரபல இயக்குனர் பி.வாசு ஒரு கதையை வைத்து நீண்ட நாள்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.
அதுவும் விஜய் ஆசைப்பட்டு கேட்ட படமாம் அது. 1990 ஆம் ஆண்டில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த நடிகன் என்ற படத்தை மீண்டும் எடுக்க கோரி பி.வாசுவிடம் கூறினாராம். அந்த படத்தில் நடிக்க ஆசையாக இருக்கு எனவும் அதை மீண்டும் எடுக்க வேண்டும் எனவும் கூறினாராம் விஜய்.
அவர் சொன்னதை கேட்டு விஜய்க்கு ஏற்றாற்போல கதையை வடிவமைத்து தயாராக இருக்கிறாராம் வாசு. ஆனால் விஜயும் சொல்லிக் கொண்டே இருக்கிறாராம். கண்டிப்பாக அந்த கதையை பண்ணலாம் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்று வாசு தெரிவித்தார்.