சார் உங்களுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்!.. விஜய்க்கே விபூதி அடித்த தயாரிப்பாளர்!.. அட அந்த படமா?!..

மாடல் அழகியாக இருந்து உலக அழகி பட்டம் பெற்றவர் ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்னம் இவரை தனது இருவர் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று பல படங்களிலும் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவும் மாறினார். பொதுவாக சில நடிகைகள் ரசிகர்களுக்கு கனவு கன்னிகளாக இருப்பார்கள்.

ஆனால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல நடிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டில் பல நடிகர்களும் இவருடன் ஜோடி போட்டு நடிக்க போட்டி போட்டனர். ஆதற்கு காரணம் வாளிப்பான உடலமைப்பும், ஐஸ்வர்யா ராயின் அழகும்தான்.

இதையும் படிங்க: விஜயால கண்ட கனவு எல்லாம் நாசமா போச்சே! கடுப்பில் விஷால்.. எங்க வந்து நிக்குது பாருங்க?

சல்மான்கான், ஷாருக்கான் என பலருடனும் ஐஸ்வர்யா ராய் நடித்தார். தமிழில் சில முக்கிய இயக்குனர் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கிய ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படங்களில் நடித்தார்.

ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி போட்டி நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இருந்தது. இதில், ரஜினிக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மற்ற யாருக்கும் அமையவில்லை. விஜய்க்கும் அந்த ஆசை இருந்தது. இந்நிலையில் ‘தமிழன்’ படம் உருவான போது நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

இதையும் படிங்க: கமலிடம் மாட்டிக்கொண்டு முழித்த ஹரி!.. ஜஸ்ட் மிஸ்!.. நல்லவேளை உண்மைய சொல்லிட்டாரு!..

அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஜி.வி விஜயிடம் சென்று ‘இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்’ என சொல்ல சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், மும்பை சென்று ஐஸ்வர்யா ராயிடம் பேசிய போது ‘விஜயா?.. அவர் எனக்கு தம்பி போல இருப்பார்’ என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராய்.

vijay

‘சரி ஐஸ்வர்யா ராய் இல்லனா பரவாயில்லை. ஆனால், உலக அழகிதான் வேண்டும்’ என விஜய் அடம்பிடிக்க அப்போது உலக அழகி பட்டம் பெற்றிருந்த பிரியங்கா சோப்ராவை நடிக்க வைத்தனர். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவர தவறி தோல்விப்படமாக அமைந்துவிட்டது.

 

Related Articles

Next Story