என்னுடைய பேர அஜித்துக்கு முன்னாடி சொல்லுங்க!.. அப்பவே கணக்கு போட்டு வேலை பார்த்த விஜய்!..
தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு பெரிய நடிகர்களுக்கு போட்டி இருக்கும். அல்லது போட்டி இருப்பதுபோல் இரண்டு பெரிய நடிகர்கள் எப்போதும் திரையுலகில் இருப்பார்கள். இது ஹிந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி திரையுலகில் பொருந்துகிறதோ இல்லையோ தமிழ் திரையுலகுக்கு நூறு சதவீதம் அது பொருந்தும்.
50,60களில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் போட்டி நடிகர்களாக இருந்தார்கள். நேரில் சந்தித்து கொள்ளும்போது அண்ணன் -தம்பியாக பழகினாலும் அவர்களுக்குள் எப்போதும் போட்டி என்பது இருந்தது. இப்போது இருப்பது போலவே அப்போதும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் மோதிக்கொள்வார்கள். சிவாஜி ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது. எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு சிவாஜியை பிடிக்காது.
அதேபோல், அடுத்த வந்த ரஜினி - கமல், இப்போது விஜய் - அஜித் என தொடர்கிறது. சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் அடித்துக்கொள்ளாத குறையாகத்தான் மோதிக்கொள்கிறார்கள். எழுபது வயதை அடைந்து பக்குவமான நடிகராக ரஜினி மாறிவிட்டார். மேடைகளில் கூட அவர் கமலை இப்போதும் சிலாகித்து பேசுகிறார். நான் கமல் போல சிறந்த நடிகர் இல்லை என பெருந்தன்மையாக பேசுகிறார். அந்த எளிமையால்தான் அவர் இப்போதும் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். இது இப்போது இருக்கும் நடிகர்களிடம் பார்க்க முடிவதில்லை.
அப்பா எஸ்.ஏ.சி இயக்குனர் என்பதால் நடிகராக ஆசைப்பட்டவர் விஜய். துவக்கத்தில் பல படங்கள் சரிக்கினாலும் பூவே உனக்காக படம் மூலம் அவரின் கேரியர் மாறியது. பல படங்களில் தன்னை ரஜினி ரசிகனாகவே காட்டிக்கொண்டு மேலே வந்தவர் இப்போது ரஜினியின்சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகராக மாறிவிட்டார். சமீபகாலமாகவே இந்த சூப்பர்ஸ்டார் பட்டம் பற்றிய விவாதம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஜெயிலர் ஆடியோ விழாவில் ரஜினி பேச்சிலும் இது எதிரொலித்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி ‘பத்திரிக்கைகளில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் இப்படித்தான் முதலில் எழுதி வந்தார்கள். அஜித் - விஜய் என எழுதினால் உடனே விஜயிடமிருந்து அந்த பத்திரிக்கைக்கு போன் பறக்கும். அப்படி சொல்ல வேண்டாம். இனிமேல் விஜய் - அஜித் என எழுதுங்கள் என கோரிக்கை வைப்பார்.
வலைப்பேச்சில் கூட ஒருமுறை அப்படி நாங்கள் சொல்லிவிட்டோம். உடனே விஜய் தரப்பிலிருந்து எங்களுக்கு அப்படி சொல்ல வேண்டாம் என கோரிக்கை வைத்தார்கள். எனவே, துவக்கம் முதலே எம்.ஜி.ஆர் - சிவாஜி போல, ரஜினி - கமல் போல, தனக்கு பின்னர்தான் அஜித் வர வேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருந்தார். ரஜினி ஆக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. சூப்பர்ஸ்டார் பட்டம்தான் இவர்களுக்கு வேண்டும். உலக நாயகன் பட்டத்தை கொடுத்தால் வேண்டாம் என சொல்லிவிடுவார்கள். விஜய் அதில் எப்போதும் தெளிவாக இருக்கிறார்’ என அவர் பேசினார்.
இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விஜயை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லியோ க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டதே திசைத்திருப்ப தான்.. அட இப்படி ஒரு உள்குத்து இருக்கா?