மலேசியாவில் கூடும் பிரபலங்கள்:
ஜனநாயகன்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடக்க இருக்கிறது. இந்த மாதம் 27ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் அஜித்தும் தன்னுடைய கார் ரேசில் மலேசியாவில் பிஸியாக இருந்து வருகிறார்.
இப்போது அனைவரின் எதிர்பார்ப்பு என்னவெனில் விஜயும் அஜித்தும் சந்திப்பார்களா என்பது தான். இதற்கு முன் மங்காத்தா படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும் விஜய்யும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்போல இந்த முறையும் இருவர்களும் சந்திப்பார்களா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அஜித் ரசிகர்கள்தான் டார்கெட்:
அஜித்தும் விஜய்யும் பெரும்பாலும் ஒரே ஊரில் படப்பிடிப்பில் இருந்தால் சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் அஜித் மலேசியாவில் கார் ரேசில் ஈடுபட்டு வருகிறார். விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மலேசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் அஜித் மலேசியாவில் தான் இருக்கப் போகிறார் என்பதால் கண்டிப்பாக இந்த சந்திப்பு நடக்கும் அல்லது நடக்காமல் கூட போகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் விஜய் இந்த வாய்ப்பை தவறவிட மாட்டார் என்றும் ஒரு பக்கம் பேச்சு அடிபட்டு வருகிறது. ஏனெனில் அஜித் ரசிகர்களின் பெருவாரியான ஓட்டு எல்லா கட்சியினருக்கும் தற்போது தேவைப்படுகிறது. ஒரு பக்கம் அஜித்தை வைத்து படம் எடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சித்து வருகிறது. அதோடு மத்திய அரசு அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இது எல்லாமே அரசியலுக்கான ஒரு திட்டம் தான் என்று பேசப்பட்டு வருகிறது.
சந்திப்பு:
இதே பார்முலாவையும் விஜய் ஃபாலோ பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது தேர்தல் சமயத்தில் நடக்கும் பட்சத்தில் ஓட்டுக்காக தான் விஜய் இப்படி செய்கிறார் என்பது மாதிரி மாறி மாறிவிடும். அதனால் இப்போதே இந்த சந்திப்பை நடத்தி விட்டால் அது தேர்தல் சமயத்தில் விஜய்க்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பது விஜய்க்கு நன்றாகவே தெரியும்.
அதனால் விஜய் மனதில் அஜித்தை சந்திக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கலாம் .அது அஜித் நினைத்தால் மட்டுமே முடியும். அதனால் இந்த சந்திப்பு நடக்கலாம் அல்லது நடக்காமல் கூட போகலாம். அது என்னவாக இருக்கப் போகிறது என்பதை இன்னும் சில தினங்களில் நாம் பார்க்கலாம்.
