latest news

தலை கீழாகத்தான் குதிப்பேன்!. தனித்து நிற்கும் விஜயின் முடிவு சரியா?…

நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது.
கட்சி துவங்கிய போது விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் எங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என அறிவித்தார் விஜய்..

இப்படி அறிவித்தால் பல வருடங்களாக அதிமுக, திமுக கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் அரசியல் கட்சிகள் தன் பக்கம் வரும் என விஜய் ஒரு கணக்கு போட்டார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. ஏனெனில் விஜய் அரசியலுக்கு புதுசு என்பதுதான் அதற்கு காரணம். விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவர் ரசிகர்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.. ஆனால் தேர்தலில் வெற்றி பெற பொதுமக்களின் ஆதரவும், வாக்கும் மிகவும் முக்கியம். ஆனால் எல்லோருடைய ஆதரவும் நமக்கு கிடைக்கும் என விஜய் நம்பிக்கொண்டிருக்கிறார்..

அதனால்தான் இப்போது வரை எந்த கட்சியுடனும் தவெக கூட்டணி அமைக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் தவெகவுடன் இணைய ஆர்வம் காட்டியது.. சிலர் தவெகவுடன் பேசினார்கள்.. ஆனால் என்ன காரணமோ அது நடக்கவில்லை. ஒருபக்கம் அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணைகிறார் என்கிற செய்தி கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருந்தது.. ஆனால் தவெக அதை மறுக்கிறது. ஊடகங்களில்தான் செய்து வெளியாகி வருகிறதே தவிர எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை..

எனவே, விஜயின் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விஜய் தடுத்து நின்றால் 17 சதவீத வாக்குகளை வாங்குவார் என கருத்துக்கணிப்புகள் சொல்கிறது. ஆனால், விஜய் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை திமுகவிலிருந்து பிரிப்பார்.. திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை அதிமுகவிடமிருந்து பிரிப்பார்.. சில தொகுதிகளில் வெற்றி பெறுவார். எனவே அவர் கூட்டணி அமைப்பதுதான் நல்லது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

ஆனால் விஜய் அதை நம்புவது போல் தெரியவில்லை.. நாம்தான் கிங் மேக்கர்.. தவெக 25 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று பல தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதிமுகவும், திமுகவும் மெஜாரிட்டி கிடைக்காமல் போகும் ஆட்சி அமைக்க நம்மிடம் வந்து கெஞ்சுவார்கள்.. அப்போது நாம் டிமாண்ட் வைப்போம் என நம்புகிறார் விஜய். இதையடுத்து விஜய் தலை கீழாகத்தான் குதிப்பேன் என முடிவெடுத்துவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

விஜய் நம்புவது நடக்குமா?. அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்..

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago