நெல்சனை அவமானப்படுத்திய விஜய் - தட்டிக்கொடுத்து தனி விழாவே நடத்தப்போகும் ரஜினி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தால் மட்டுமே மார்க்கெட் பிடித்து நல்ல மதிப்பு மாதிரியாதையுடன் இருக்க முடியும் குறிப்பாக அடித்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படித்தான் மிகவும் கஷ்டப்பட்டு திறமையை மட்டும் வைத்து சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர் நெல்சன் திலீப் குமார்.

இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக முத்திரை படைத்தார். அதையடுத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி இயக்குனர் ஆனார். தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியதால் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது

இதனால் விருது விழா ஒன்றில் அவர் அவமதிக்கப்பட்டார். இதை அறிந்த ரஜினி நெல்சனை ஜெயிலர் ஷூட்டிங்கில் சந்தித்து இதையெல்லாம் பெரிது படுத்திக்கொள்ளவேண்டாம். எனக்கும் இதுபோன்று நிறைய அவமானம் நடந்துள்ளது என கூறி அவருக்கு ஆறுதல் அளித்தாராம். இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் ஜெயிலர் படம் வெற்றி அடைந்தால் ரஜினி நெல்சனுக்கென தனி விழா ஒன்றையே நடத்த திட்டமிட்டுள்ளார் என அவர் கூறினார்.

 

Related Articles

Next Story