
Cinema News
விஜய்க்கு எமனாக வந்த கொரோனா – போட்ட திட்டம் எல்லாம் வீணாப்போச்சே!…
மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. விஜயை நெல்சன் கட்டிப்பிடித்து வழியனுப்பிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. தற்போது வேறு சில காட்சிகளை நெல்சன் படமாக்கி வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.
ஒவ்வொரு படம் முடியும் போதும் விஜய் லண்டனில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு செல்வார். தற்போது பீஸ்ட் படத்தில் அவரின் காட்சிகள் முடிந்துவிட்டது. மேலும், இந்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் 22ம் தேதி குடும்பத்துடன் அவர் லண்டன் புறப்பட்டு செல்கிறார் எனவும், பொங்கல் முடிந்த பின்னரே அவர் சென்னை திரும்புகிறார் எனவும் செய்திகள் வெளியானது.
ஆனால், ஓமைக்ரான் வைரஸ் லண்டனில் அதிகமாக பரவி வருவதால் விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டு வருகிறதாம். எனவே, விஜய் லண்டன் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விஜய் வேறு ஏதேனும் நாட்டுக்கு செல்வாரா இல்லை சென்னையிலேயே ஓய்வு எடுப்பாரா என்பது தெரியவில்லை..