அரசியல் ரூட் எடுக்கும் தளபதி… கோலிவுட்டின் டாப் சம்பளம்… விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளோ தெரியுமா?

Published on: February 28, 2024
---Advertisement---

Vijay: நாளைய தீர்ப்பில் தொடங்கிய தனது திரைப்பயணத்தை தளபதி69 உடன் முடிக்க இருக்கிறார் தளபதி விஜய். பெரும்பாலும் அவரின் சம்பளம் மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் அவரின் சொத்து மதிப்பு குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் விஜய்யின் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை ஆனால் அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வந்திருக்கிறார். முன்னணி நடிகர் இடத்தை பிடித்த விஜய்க்கு சச்சின் திரைப்படத்திலிருந்து தான் பெரிய தொகையில் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சரத்குமார் – நக்மா காதலால் பாதிக்கப்பட்டவன் நான்! தயாரிப்பாளர் பட்ட வேதனை.. இப்படிலாம் நடந்துருக்கா

தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் அவருக்கு 150 கோடி வரை சம்பளம் கொடுத்து இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தளபதி69 படத்தில் அவருக்கு 200 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம்.

இது மட்டும் இல்லாமல் விஜய் நடித்திருந்த கோக் உள்ளிட்ட சில விளம்பரங்களுக்கு அவருக்கு 10 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். ரோல்ஸ் ராய், ஆடி, பிஎம்டபுள்யூ உள்ளிட்ட 5 கார்கள் 6 முதல் 10 கோடி மதிப்பில் வைத்திருக்கிறார். 

மேலும் நிறைய அப்பார்மெண்ட், கல்யாண மண்டபம், ஷாப்பிங் மால் கட்டி அது வாடகைக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலமும் பெரிய தொகையை வருமானமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். இதனை வைத்து பார்க்கும் போது விஜயின் சொத்த மதிப்பு சுமார் 445 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ஜெயிலர் 2வா பிச்சிப்புடுவேன் பிச்சி… எகிறிய ரஜினி!.. கூல் செய்ய வேறு ரூட் பிடித்த நெல்சன்…

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.