இளைய தளபதியின் அராபிக் குத்து சாங்க்..! என்ன ஸ்டெப்? வேற லெவல்..சந்தோஷத்தில் ரசிகர்கள்.
இளைய தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
பீஸ்ட் படத்தின் #ArabicKuthu எனும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில் அடுத்த செகண்ட் NO-1 ட்ரெண்ட்ங்கில் இருக்கிறது. விஜய் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும்.
அதே நிலையில் அவருக்கென்று நடனத்தில் ஒரு தனி ஸ்டைலும் உண்டு. ஒவ்வொரு படத்திலும் அவரின் டான்ஸை தெறிக்க விடுகிற மாதிரியான பாடல் கண்டிப்பாக இருக்கும். கடைசியாக வந்த மாஸ்டர் படத்திலும் கூட "வாத்தி கம்மிங் ஒத்து". இப்பாடலுக்கு அவரின் டான்ஸ் அனைவரையும் ஆட வைத்தது.
அதுபோல் பீஸ்ட் படத்திலும் " ArabicKuthu " பாட்டும் அந்த அளவுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பாட்டின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரை பார்த்ததும் முழு சாங்க் எப்போ ரிலீஸ் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.