Connect with us
vijay_main

Cinema News

மறுத்த விஜய் சேதுபதி… வாய்ப்பை தட்டி தூக்கிய வில்லன் நடிகர்…. தயாராகும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்….!

திரையுலகில் ஏற்பட்ட கதை பஞ்சம் காரணமாக சமீபகாலமாக மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை அந்தந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கையில் எடுத்து வருகிறார்கள். அப்படி பல படங்கள் இரண்டு மூன்று பாகங்கள் என உருவாகியுள்ளன.

தற்போது அந்த வரிசையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அது வேறு எந்த படமும் அல்ல கடந்த 1992ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்னக்கவுண்டர் படம் தான். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

vijai1

கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அந்த படத்தின் இயக்குனர் உதயகுமார் மிகவும் ஆர்வமாக உள்ளாராம். மேலும் பல வருடங்களாகவே சின்ன கவுண்டர் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதியும், அதற்கான நடிகர்களையும் தேர்வு செய்தும் வருகிறாராம்.

Vijay2

முன்னதாக இந்த படத்தில் நடிக்க பிரபல நடிகர் விஜய் சேதுபதியிடம் உதயகுமார் கேட்டுள்ளார். ஆனால் விஜய் சேதுபதி கால்ஷீட் காரணமாக இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top