Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் விஷயத்தில் மீண்டும் ரசிகர்கள் அதிருப்தியாகி கோபமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் சில விஷயங்களும் இணையத்தில் உலா வருகிறது.
மதுரையில் இருந்து நடிப்பில் கொடிக்கட்ட வேண்டும் என்ற முடிவில் சென்னை வந்தவர் விஜயகாந்த். மதுரையில் ராசி ஸ்டுடியோவில் அவர் எடுத்த புகைப்படத்தால் தான் அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் அமைந்தது. அவரின் கலரால் முதலில் பல முக்கிய சினிமா வாய்ப்புகளை இழந்தார். விஜயகாந்த் என்ற பெயரில் முதன்முதலில் இனிக்கும் இளமை படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: அபார்ஷன் பண்ண சொன்ன கோபி… கடுப்பில் கத்திவிட்ட ராதிகா… தேவையா இதெல்லாம்?
அப்படம் மட்டுமல்லாது அதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் தோல்வியை தழுவியது. அவரை கமர்ஷியல் வெற்றி நாயகனாக மாற்றியது சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் தான். அதை தொடர்ந்து அவருக்கு ஏறுமுகம் தான். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராக உருவெடுத்தார். புரட்சி கலைஞர் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
பின்னர் அரசியலுக்குள் நுழைந்து சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போக உடல்நல பிரச்னையில் சிக்கினார். அதை தொடர்ந்து பல வருடமாக சிகிச்சையில் இருந்தார். பின்னர் கடந்த வருடம் டிசம்பரில் உயிரிழந்தார். அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்தது. இது பலரிடம் பாராட்டுக்களை பெற்றாலும் அவர் உயிருடன் இருக்கும் போதே இதை தந்து இருக்கலாமே என்ற அதிருப்தியும் நிலவியது.
இதையும் படிங்க: நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…
டெல்லியில் நேற்று பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் விஜயகாந்தின் விருது கொடுக்கப்படவில்லை. இது அரசியல் காரணங்களால் அவரை அவமானப்படுத்தியதாக ரசிகர்கள் கொதித்துவிட்டனர். ஆனால் பலகட்டங்களாக கொடுப்பதால் முதல் சிலருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் விஜயகாந்தின் விருது அவர் குடும்பத்திடம் முறையாக கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…