செண்டிமெண்டாக ஹிட் கொடுக்க வேண்டும் என விரும்பி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் சில சமயங்களில் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்துவிடுகின்றன. அதிலும் ஒவ்வொரு நடிகர்களும் தாங்கள் நடிக்கும் 100வது திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என நினைப்பதுண்டு.
இயக்குனர் ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான திரைப்படம் நவராத்திரி. இந்த திரைப்படம் சிவாஜி கணேசனின் 100 ஆவது திரைப்படமாகும்.
இது 100 ஆவது திரைப்படம் என்பதால் அதை இன்னமும் சிறப்பாக்க சிவாஜி கணேசன் அதில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்தார். இந்த படம் ஓரளவு ஹிட் கொடுத்தது என்றாலும் அதற்கு முன்பு சிவாஜி படங்கள் கொடுத்த ஹிட்டை முறியடிக்கவில்லை.
அதே போல ரஜினிகாந்திற்கு 100வது திரைப்படமாக அமைந்த திரைப்படம் ஸ்ரீ ராகவேந்திரா. அவர் நடித்த திரைப்படங்களிலேயே பெரும் தோல்வியை கணது ராகவேந்திரா.
விஜயகாந்திற்கு ஹிட்:
நடிகர் கமலும் இதே போல 100வது திரைப்படமாக ராஜ பார்வை திரைப்படத்தில் நடித்தார் ராஜபார்வை திரைப்படம் ஒரு ஆவரேஜான வெற்றியை தந்தது. ஆனால் உள்ள நடிகர்களிலேயே 100வது திரைப்படம் அதிரிபுதிரியான வெற்றி கொடுத்தது விஜயகாந்திற்குதான்.
நடிகர் விஜயகாந்திற்கு 100வது திரைப்படமாக அமைந்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கினார். பெரும் ஹிட் கொடுத்தது கேப்டன் பிரபாகரன். இந்த படத்திற்கு பிறகுதான் விஜயகாந்திற்கு கேப்டன் என்கிற பட்டபெயர் வந்தது.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடித்த 100 ஆவது திரைப்படங்களிலேயே வசூல் ரீதியாக அதிக ஹிட் கொடுத்த படம் கேப்டன் பிரபாகரன் தான் என நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த நடிகரின் மரணத்திற்கு காரணமே இவர்தான்!.. கேஸ் போட்டாலும் சந்திக்க தயார்.. ஒப்பன் டாக் கொடுத்த பிரபலம்..
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…