தமிழ் சினிமாவில் விஜயகாந்த் செய்த பெரும் சாதனை.. சிவாஜி கணேசனே அதுக்கு அப்புறம்தான்!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக நன்மைகள் செய்தவராக அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். விஜய்காந்த் சினிமாவில் டாப் நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவரது படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்து வந்தன.
இதனால் விஜயகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அதிலும் புதிய இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்பளித்து வந்தார் விஜயகாந்த். ஒவ்வொரு வருடமும் விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றன.

1984 ஆம் ஆண்டு மட்டும் விஜயகாந்த் நடிப்பில் 18 திரைப்படங்கள் வெளியாகின. அதில் வைதேகி காத்திருந்தாள், இது எங்க பூமி, நாள உனது நாள், நல்ல நாள், வெற்றி போன்ற பல படங்கள் பெரும் ஹிட் கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் எந்த ஒரு நட்சத்திரமும் கதாநாயகனாக இத்தனை படங்கள் நடிக்கவில்லை.
சிவாஜி கணேசனே செய்யாத சாதனை:
நடிகர் சிவாஜி கணேசன் அதிகமாக படம் நடிக்க கூடியவர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் வரை நடிக்க கூடியவர். நான்கு வெவ்வேறு படங்களுக்கு ஒரே நாளில் மாற்றி மாற்றி நடிப்பவர் சிவாஜி கணேசன். ஆனால் அவர் நடிப்பிலேயே ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வந்ததில்லை.

எனவே தமிழ் சினிமா வரலாற்றிலேயே மற்ற நடிகர்களால் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை செய்துள்ளார் விஜயகாந்த். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு ரஜினி படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் விஜயகாந்த் ரசிகர்களுக்கு அப்போதெல்லாம் மாதா மாதம் விஜயகாந்த் படம் வெளிவந்து கொண்டிருந்திருக்கும் என்பது வியப்பான விஷயம்தான்…
இதையும் படிங்க: சமந்தா மீது இப்படி ஒரு பழியா?.. என்ன இருந்தாலும் பொது மேடையில் இப்படி பண்ணியிருக்க கூடாது..