மகனுடன் நடிக்கும் கேப்டன் விஜயகாந்த்!.. 5 சீனும் சும்மா தெறியா இருக்குமாம்!..

by சிவா |   ( Updated:2024-05-12 05:31:34  )
vijayakanth
X

ஆங்கிலத்தில் AI (Artificial Intelligence) என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகின் பல துறைகளில் பிரபலமாகி வருகிறது. இல்லாத ஒருவரை கூட இதன் மூலம் கொண்டு வரமுடியும் என்பது இதன் மூலம் சாத்தியமாகி இருக்கிறது. பார்ப்பதற்கு உண்மையாக இருப்பதை போல பல அழகான இளம்பெண்களின் முகம் ஏ.ஐ.மூலம் உருவாக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல, 50 வயதுள்ள ஒருவரை 20 வயது தோற்றத்தையும் நாம் இந்த தொழில் நுட்பம் மூலம் கொண்டுவரமுடியும். ஹாலிவுட்டில் இதை எப்போது செய்துவிட்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் இப்போதுதான் இதை முயற்சி செய்ய துவங்கியுள்ளனர். முதன் முதலாக வெங்கட்பிரபு விஜயை வைத்து இயக்கவுள்ள கோட் படத்தில் ஒரு விஜயை 20 வயது இளைஞராக காட்டவிருக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி கொடுத்த காசை நயன்தாரா படத்தில் போட்டு போண்டி ஆன நபர்!.. அப்செட்டில் சூப்பர்ஸ்டார்!..

அதேபோல்தான் இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர் நெடுமுடி வேணுவை ஏ.ஐ மூலமே கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே, ஷங்கர், வெங்கட்பிரபுவை தொடர்ந்து பல இயக்குனர்களும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல புதிய முயற்சிகளை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

shanmuga

இந்நிலையில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை ஏ.ஐ தொழில் நுட்பத்தின் மூலம் கொண்டு வரவிருக்கிறார்கள். கோட் படத்தில் விஜயகாந்தை கொண்டு வரும் முயற்சியில் வெங்கட்பிரபு ஈடுபட்டிருக்கிறார். இதற்கான அனுமதியை அவர் பிரேமலதாவிடம் ஏற்கனவே வாங்கிவிட்டார்.

இதையும் படிங்க: அட இருங்கப்பா… அவங்களாம் பாவம் இல்லையா… கில்லி ரீரிலீஸின் மொத்த வசூலால் அதிரும் கோலிவுட்….

அதேபோல், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் படத்திலும் விஜயகாந்தை கொண்டுவர போகிறார்களாம். அவர் வரும் 5 காட்சிகளும் அனல் பறக்கும் என சொல்லப்படுகிறது. விஜயகாந்த் தனது மகன்களுடன் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். அது இப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நிறைவேறப்போகிறது.

padai thalaivan

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு நின்றுபோன ‘தமிழனென்று சொல்’ படத்தையும் ஏஐ மூலம் உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த படத்திலும் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அதேபோல், பல வருடங்களுக்கு முன் ஆபாவணனின் முயற்சியில் விஜயகாந்த் நடித்து 75 சதவீதத்தோடு நின்று போன ‘மூங்கில் கோட்டை’ படத்தையும் ஏ.ஐ மூலம் முடித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story