Connect with us
saravana store

சினிமாவில் விஜயகாந்த் மீண்டும் நடிப்பது உண்மைதான்! – பரபரப்பு தகவல்…

Cinema News

சினிமாவில் விஜயகாந்த் மீண்டும் நடிப்பது உண்மைதான்! – பரபரப்பு தகவல்…

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். தேமுதிக எனும் கட்சியை துவங்கி அரசியலும் கால் பதித்தவர். தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். ஆனால், அவரின் முன் கோபம் காரணத்தால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டவர். மேலும் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜயகாந்தை பொறுத்தவரை அவரால் சரியாக பேச முடியவில்லை மற்றும் மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியாத நிலையில் இருக்கிறார். இப்படி இருக்க அவர் எப்படி நடிப்பார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

vijayakanth

ஆனால், அவர் நடிப்பு உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது. கோலிசோடா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் விஜயகாந்த் நடிக்கவுள்ளாராம். ஒரு அறையில் அமர்ந்து கொண்டு காரியங்களை சாதிக்கும் கீ மேக்கராக அவர் நடிக்கவுள்ளாராம்.

விஜய் மில்டன் கூறிய கதை விஜயகாந்தின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்துபோக, விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவரின் வீட்டிலேயே எடுக்க விஜய் மில்டன் திட்டமிட்டுள்ளாராம்.

எது எப்படியோ. விஜயகாந்தை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்..

Continue Reading
To Top