விஜயகாந்த் வில்லனாகக் கெத்து காட்டிய படங்கள்... டாங்லீக்கே முன்னோடியாக இருந்த கேப்டன்!

கேப்டன் விஜயகாந்த் ஹீரோவாக நடிச்சித் தான் நமக்குத் தெரியும். வில்லனா நடிச்சிப் பார்த்ததில்லையே... இங்க பாருங்க. ஆச்சரியத்தில் அசந்து போவீங்க. வில்லனாகவும் இப்படி எல்லாம் படங்கள் நடிச்சிருக்காரான்னு பார்த்தா எல்லாமே வேற லெவல்ல இருக்கு. வாங்க பார்க்கலாம்.

விஜயகாந்த் நடிச்ச முதல் படமே வில்லன் தான். அதுதான் இனிக்கும் இளமை. 1979ல் வெளியானது. எம்.ஏ.காஜா இயக்கத்தில் வெளியானது. அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திவிட்டார். சுதாகர், ராதிகா, வி.கே.ராமசாமி, காந்திமதி உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க... அந்த சீனில் அப்பாஸ் இல்லாம வேறு யாராவது நடிச்சிருந்தா? மனம் திறக்கும் மாளவிகா

விஜயகாந்த் நடித்த 2வது படம் சாமந்திப் பூ. 80ல் வெளியான இதுவும் வில்லன் வேடம் தான். விஜயகாந்த் பணக்கார வீட்டுப்பிள்ளை. அவருக்கு ஷோபா மேல ஒரு கண். அதனால பிளே பாய் ரோல்ல கலக்குகிறார். பிரகாஷ் என்ற கேரக்டரில் கேப்டன் கலக்கி விட்டார். அவருக்கு இது முற்றிலும் மாறுபட்ட படம்.

கமலின் சிகப்பு ரோஜாக்கள் மாதிரி விஜயகாந்துக்கு இந்த நூலறுந்த பட்டம் படம். 81ல் வெளியானது. விஜயகாந்துக்கு வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்புமே இல்லை. இதுக்கான காரணம் அவர் சின்ன வயசிலேயே பண்ணையார் மகனா வர்றாரு. கதாநாயகியை ஏமாற்றிக் கெடுத்து விடுகிறார். அதுக்கு அப்புறம் என்னன்னு படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கேப்டனை வேற லெவல் வில்லனாகக் காட்டிய படம். 82ல் வெளியான படம். இதுல அவர் ஆன்டி ஹீரோ. பொம்பள ஷோக்குன்னு சொல்வாங்களே அந்தக் கேரக்டர்ல நடிச்சி அசத்திருப்பாரு. அதுதான் இந்த ஓம்சக்தி படம். கேரக்டரில் விஜயகாந்தா இப்படி நடிச்சிருக்காருன்னு நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

Parvaiyin Marupakkam

Parvaiyin Marupakkam

85ல் வெளியான படம் ராமன் ஸ்ரீ ராமன். இரட்டை வேடத்தில் கேப்டன் அசத்திய படம் இதுதான். ஆள் மாறாட்டம், பெண்களை ஏமாற்றுதல் என வில்லன் ரோல்ல கெத்து காட்டியிருப்பார். படத்தில் ஒருவர் நல்லவராகவும், இன்னொருவர் கெட்டவராகவும் நடித்து இருப்பார்.

பார்வையின் மறுபக்கம் என்ற படம் விஜயகாந்தின் வேற லெவல் வில்லன் படம். வழக்கமான பழிவாங்கும் படலம் கதை தான். இந்தப் படத்தில் ஹிப்னாடிசம் பண்ணுகிறார் கேப்டன். சொல்லப்போனால் ஏழாம் அறிவு படத்தின் வில்லன் டாங்லீக்கே இவர் தான் முன்னோடி.

 

Related Articles

Next Story