மம்முட்டி நடிக்க வேண்டிய படத்துல நடிச்ச விஜயகாந்த்.. கடைசி நேரத்தில் மாறியது எப்படி?..

சினிமாவில் ஒரு ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் அவர் நடிக்க முடியாமல் போக அல்லது அவர் நடிக்க விருப்பமில்லாமல் போக இன்னொரு ஹீரோ நடிப்பது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது.. ரஜினிக்கு வந்த கதையில் கமலும், கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினியும், அஜித் நடிக்க வேண்டிய படத்தில் சூர்யாவும், விஜய் நடிக்க மறுத்த கதையில் விஷாலும் நடித்துள்ளனர். சினிமாவில் இப்படி நடப்பது சகஜமான ஒன்றாகும்.

சினிமாவில் நடித்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக மாறினார். அவரின் நண்பர் இப்ராகிம் ராவுத்தர் பெயரில் பட நிறுவனம் துவங்கி உழவன் மகன், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார்.

vijayakanth

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வந்த மனோபாலா இப்ராகிம் ராவுத்தர் பட நிறுவனத்துக்காக இயக்கிய திரைப்படம் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். இந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஏற்றார்போல் மனோபாலா கதையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், இந்த கதையில் விஜயகாந்தே நடிக்கட்டும். கதையை மாற்றுங்கள் என ராவுத்தர் சொல்லவே அந்த கதையை விஜயகாந்துக்கு ஏற்றது போல் மனோபாலா மாற்றினார். இப்படத்திற்கு இளைய கங்கை என்பவர் இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது.

இப்படம் 1991ம் வருடம் நவம்பர் மாதம் வெளியானது. இதில், விஜயகாந்துக்கு ஜோடியாக ரூபினியும் மற்றும் மன்சூர் அலிகானும், ஆனந்தராஜும் நடித்திருந்தனர்.

 

Related Articles

Next Story