17 மணி நேரம் தொடர்ந்து சண்டை போட்ட கேப்டன்… அசந்துபோன தயாரிப்பாளர்… வேற லெவல் சம்பவம்…

by Arun Prasad |
Vijayakanth
X

Vijayakanth

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து பலரும் அறிந்திருப்பார்கள். உதவி என்று யார் வந்து நின்றாலும் அவருக்கு தேவையானதை செய்துகொடுத்துவிட்டு மனநிறைவோடுதான் வந்தவரை திருப்பி அனுப்புவார்.

அது மட்டுமல்லாது பசியோடு வருபவர்களை சாப்பிட வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் அடுப்பு அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு வள்ளலாக திகழ்ந்து வருபவர் விஜயகாந்த்.

Vijayakanth

Vijayakanth

அதே போல் ஒரு திரைப்படத்திற்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கக்கூடியவர் விஜயகாந்த். குறிப்பாக பல சண்டை காட்சிகளில் தனது உயிரையே பணயம் வைத்து நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு திரைப்படத்திற்காக விஜயகாந்த், தொடர்ந்து 17 மணி நேரம் சண்டை காட்சிகளில் ஈடுபட்டது குறித்த ஒரு ஆச்சர்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.

1985 ஆம் ஆண்டு விஜயகாந்த், அம்பிகா, எம்.என்.நம்பியார், சோ ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “புதிய தீர்ப்பு”. இத்திரைப்படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டை காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்களாம். காலை 9 மணிக்கு அந்த காட்சியை படமாக்கத் தொடங்கினார்கள். ஆனால் மாலை ஆகியும் அந்த காட்சியை முழுவதுமாக எடுத்து முடிக்க முடியவில்லையாம்.

Vijayakanth

Vijayakanth

ஆதலால் இயக்குனர் ராஜேந்திரன் விஜயகாந்திடம் “இன்று படமாக்கியது போதும், மீதியை நாளை படமாக்கிக்கொள்ளலாம்” என கூறினாராம். அதற்கு விஜயகாந்த் “இல்லை வேண்டாம். எவ்வளவு மணி நேரம் ஆனாலும் சரி. இன்றே எடுத்து முடித்துவிடுவோம்” என கூறினாராம்.

அதாவது அன்றுடன் அந்த சண்டை காட்சியை எடுத்து முடித்துவிட்டால், அதற்கு அடுத்த நாள் படப்பிடிப்பு நடத்த தேவையில்லை. மேலும் இன்னொரு நாள் கூடுதலாக படப்பிடிப்பு நடத்துவது தயாரிப்பாளருக்குத்தான் வீண் சிரமம் என்று நினைத்தாராம் விஜயகாந்த். ஆதலால்தான் அந்த நாளிலேயே அந்த சண்டைக் காட்சியை முடித்துவிடுவோம் என முடிவு செய்தாராம்.

இதையும் படிங்க: சொந்த தந்தையையே அசிஸ்டெண்ட்டாக வைத்திருக்கும் சிம்பு பட இயக்குனர்… இது தெரியாம போச்சே!!

Vijayakanth

Vijayakanth

காலை 9 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு அடுத்த நாள் காலை 2.30 மணி வரை நீடித்ததாம். கிட்டத்தட்ட 17 மணி நேரம் ஆகியும் விஜயகாந்த் சோர்வில்லாமல் நடித்துக்கொடுத்தாராம். விஜயகாந்த்தின் இந்த அசாத்திய உழைப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுப்போனார்களாம்.

Next Story