
Cinema News
சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் விஜயகாந்த்…இயக்குனர் யார் தெரியுமா?…
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் பிரபகாரன் திரைப்படத்திற்கு அவர் ரசிகர்களாலும், திரையுலகினராலும் கேப்டன் என அழைக்கப்பட்டார். நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். மனித நேயத்திற்கு பெயர் போனவர். மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வதில் அவருக்கு நிகர் அவரே.
அரசியலில் ஆர்வம் உள்ள அவர் தேமுதிக கட்சியை துவங்கினார். அதன் காரணமாக எதிர்கட்சி தலைவராகவும் அவர் அமர்ந்தார். சட்டசபையில் ஜெயலலிதாவையே எதிர்த்து பேசி பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், அவரின் போதாத காலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும் ‘கோலி சோடா’ படத்தை இயக்கியவருமான விஜய் மில்டன் இயக்கவுள்ள ‘மழை பிடிக்கும் மனிதன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஏற்கனவே சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி வெளியானதும் ‘இது உண்மைதானா?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ இது நடந்தால் மகிழ்ச்சி எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.