குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

Published on: January 1, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் இந்த அளவுக்கு புகழ் அடைந்திருக்க மாட்டார். சினிமா துவங்கியது முதல் எத்தனையோ நடிகர்களை இந்த திரையுலகமும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு எத்தனை பேர் அமர்ந்தார்கள் என்பதுதான் வரலாறு.

அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் பழகிய விதம், சக மனிதனுக்காக துடிக்கும் அந்த மனசு, தன் முன்னால் யாரும் பசியோடு இருக்கக் கூடாது, யாரும் அவமானப்படக்கூடாது என நினைக்கும் அந்த உயர்ந்த எண்ணம், மற்றவர்களுக்கு உதவும் குணம், எல்லோரிடமும் சகஜமாக, எளிமையாக பேசும் அவரின் சுபாவம் ஆகியவைத்தான்.

இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…

கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். அதோடு, பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தார். சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாமலும் இருந்தார்.

கடந்த 28ம் தேதி அவர் மறைந்தார். அவர் இறந்தபின்னர் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சத்ரியன், ஏழை ஜாதி ஆகிய படங்களில் அவருடன் நடித்த வின்சண்ட் ராய் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஏழை ஜாதி படத்தில் ஒரு காட்சியில் சைதாப்பேட்டை பாலத்தை அவர் கடந்து செல்வது போல காட்சி. அது மதிய வெயில் நேரம். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே படப்பிடிப்பை நிறுத்த சொன்னார். விசாரித்ததில் அது ஒரு துணை நடிகையின் குழந்தை. அந்த பெண்ணை அழைத்து ‘வெயில்ல எதுக்குமா குழந்தையோடு வந்தீங்க?’ என கேட்டார்.

இதையும் படிங்க: இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

350 கொடுப்பதாக சொன்னார்கள் அதனால் வந்தேன் சார் என அப்பெண் சொல்ல, உடனே புரடெக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘இந்த பொண்ணுக்கு தினமும் 1000 ரூபாய் கொடுங்கள்’ என்றார். மேலும் அவரின் கைப்பையில் இருந்த பையில் இருந்த பிஸ்கட், ஜூஸ் ஆகியவற்றை அந்த பெண்ணுக்கு கொடுக்க சொன்னார். இந்த அம்மாவ நிழல் இருக்க இடமா பாத்து தங்க வை’ என சொல்ல்விட்டு படப்பிடிப்பை மீண்டும் நடத்த சொன்னார்.

viincent

படப்பிடிப்பின்போது துணை நடிகர்கள், நடிகைகள் என யாருக்கேனும் பிரச்சனை எனில் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிடுவார். அவர்களின் பிரச்சனையை சரி செய்த பின்னரே மீண்டும் நடிப்பார். சினிமாவில் எந்த நடிகரும் இப்படி இருக்க மாட்டார்கள்’ என வின்செண்ட் ராய் கூறியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.