செந்திலை அடிக்க ரவுண்டி கட்டிய ரவுடிகள்!.. களத்தில் இறங்கி பொளந்து கட்டிய விஜயகாந்த்….

by சிவா |
செந்திலை அடிக்க ரவுண்டி கட்டிய ரவுடிகள்!.. களத்தில் இறங்கி பொளந்து கட்டிய விஜயகாந்த்….
X

vijayakanth

திரையுலைகில் சினிமா பின்னணி இல்லாமல் நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜயகாந்த். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் முன்னணி கதாநாயகனாக மாறியவர். ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். விஜயகாந்த படங்கள் என்றாலே ஆக்‌ஷனுக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்களும் அவரிடம் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். எனவே, விஜயகாந்த் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். குறிப்பால பல படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Vijayakanth
Vijayakanth

சினிமாவில் மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் விஜயகாந்த் ஆக்‌ஷன் ஹீரோதான். படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் பிரச்சனை எனில் வேட்டியை மடித்துக்கொண்டு முதல் களம் இறங்குவது விஜயகாந்துதான். இதை அவருடன் நடித்த பல நடிகர்கள் கூறியுள்ளனர். படப்பிடிப்புக்கு வேண்டுமென்றே யாராவது பிரச்சனை கொடுத்தால் அவர்கள் விஜயகாந்திடம் பஞ்ச் வாங்காமல் வீட்டுக்கு போக மாட்டார்கள்.

விஜயகாந்தின் நண்பரும் நடிகருமான வாகை சந்திரசேகர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஒருமுறை, செந்தூரப்பூவே படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த போது நள்ளிரவில் படப்பிடிப்புக்காக காத்திருந்தோம். சவுக்கு தோப்பில் நள்ளிரவு நேரம் அது. அப்போது சிலர் மது போதையில் நடிகர் செந்திலிடம் தகராறு செய்து அவரை அடிக்க சென்றனர்.

vijayakanth

இதை நானும், விஜயகாந்தும் பார்த்து அங்கு சென்று அவர்களிடம் பொறுமையாக சொன்னோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் 20 பேர் இருந்தனர். கையில் கிடைத்ததை வைத்து நானும், விஜயகாந்தும் அவர்களை அடித்து விரட்டினோம். அதன்பின் அது பெரிய சண்டை ஆகி அருகிலிருந்த குப்பத்து மக்கள் எல்லாம் வந்துவிட்டனர். அதன்பின் போலீசாரை வரவைத்து அந்த பிரச்சனை சரி செய்தோம். சினிமாவில் மட்டும்மல்ல. நிஜத்திலும் விஜயகாந்த் ஆக்‌ஷன் ஹீரோதான்’ என சந்திரசேகர் கூறினார்.

Next Story