Cinema History
எனக்கு ஒரு துப்பாக்கி வேணும்!.. ஆசையாக கேட்ட விஜயகாந்த்!… ராவுத்தர் அடித்த கமெண்ட்!..
விஜயகாந்தும், இப்ராகிம் ராவுத்தரும் சிறுவயது முதலே நண்பர்கள். சினிமாவில் நடிப்பதற்காக மதுரையில் இருந்து ஒன்றாக சென்னை கிளம்பி வந்தவர்கள். இவர்களில் ராவுத்தருக்கு தன் நண்பனை சினிமாவில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதில் அலாதி ஆர்வம். அப்போது முதல் இந்த நட்பு தொடர்ந்து வந்தது.
விஜயகாந்தின் வளர்ச்சியில் பெரிதும் உறுதுணையாக இருந்தவர் ராவுத்தர் தான். அவருக்கு வில்லன் வேடம் தேடி வந்த போது கூட இனி நீ நடித்தால் ஹீரோவாகத் தான் நடிக்க வேண்டும் என்றும் இந்தப் பணத்தை திருப்பி ஏவிஎம்மிடமே கொடுத்து விடு என்றும் அறிவுரை கூறியவர் ராவுத்தர் தான். விஜயகாந்த் நடிக்கும் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று ராவுத்தர் மொட்டை கூட போட்டாராம்.
இருவரும் நகமும் சதையும் போல இணைபிரியாமல் இருந்தார்களாம். திரைத்துறையைப் பொருத்தவரை விஜயகாந்தின் விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் ராவுத்தர் தான் அக்கறையோடு எடுப்பாராம். அந்த அளவுக்கு விஜயகாந்தின் வளர்ச்சியில் ராவுத்தர் முக்கியப் பங்கை வகித்துள்ளார். இவ்வளவு இணைபிரியாத நட்பில் விஜயகாந்த்தின் திருமணத்திற்குப் பிறகு தான் பல்வேறு காரணங்களால் பிரிவு வந்துவிட்டது.
விஜயகாந்தும், இப்ராகிம் ராவுத்தரும் சண்டை போட்டுக்குவாங்களான்னு சித்ரா லெட்சுமணன் தயாரிப்பாளர் சுப்பையாவிடம் கேட்டார். அதற்கு ஒருமுறை டி.ராதாகிருஷ்ணன் ஏடிஜிபியா இருந்தார். அப்போ விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தரிடம் கேட்டார். அப்போ சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது ‘ஏன்டா இப்ராகிம், நம்ம போலீஸ்காரர் தான ஏடிஜிபியா இருக்காரு. அவருக்கிட்ட சொல்லி ஒரு ரிவால்வர் ஒண்ணு வாங்கிக்கிறேம்பா’ன்னு சொன்னார்.
அதற்கு இப்ராகிம், ஏம்பா சோத்துல உப்பு கம்மியா இருக்குன்னா சமையல்காரனா சுடறதுக்கான்னு கமெண்ட் கொடுக்க எல்லோரும் சிரித்தனர். மற்றபடி சண்டைன்னு எதுவும் வராது. புருஷன், பொண்டாட்டி மாதிரி கட்டிப்புடிச்சுக்குவாங்கன்னும் சிரித்துக் கொண்டே சொன்னார் சுப்பையா.
உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், பரதன், ராஜதுரை, சக்கரை தேவன், என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண், கருப்பு நிலா உள்பட ஏராளமான படங்களைத் தயாரித்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தான்.